காந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி
காந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி காந்தி,கார்ல் மார்க்ஸ் இருவரும் வேறுபட்ட துருவங்களாகத் தான் பார்க்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். மார்க்சிய அறிஞர்களும் காந்தீயர்களும் சந்திக்கக் கூடிய புள்ளி எதுவும் இருக்க முடியாது என்றே உறுதியாக சொல்பவர்கள் உண்டு. எனினும் இருவரது கருத்துகளும் ஒத்துப் போகின்ற தளங்கள் உள்ளன என்று தத்துவ அறிஞரும் கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியருமான அகீல் பில் கிராமி குறிப்பிடுகிறார். மேலோட்டமாக பார்க்கும் போது ஒற்றுமைகள் ஏதும் இல்லை என்றாலும் சில விளக்கங்கள் (interpretations) வழியாக ஒன்றாக உள்ள அம்சங்களை அகீல் பில் கிராமி நிறுவ முயற்சிக்கிறார். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இடது சாரி அறிஞர்களுக்கு காந்த...