Posts

Showing posts from June, 2017
பிரிட்டிஷ்  இந்தியா - இருண்ட பக்கங்கள்  - சசி தரூர் புத்தகத்தில் இருந்து   திரு ஜெயமோகன்  எழுதிய ஊமைச் செந்நாய் கதை படித்து விட்டு அதன் பாதிப்பிலேயே சில நாள் இருந்தேன். கதையில் வரும் சம்பவங்கள் என் மனதில் ஓடிகொண்டே இருந்தது. கிராமத்தில் அந்த வெள்ளையன் இருந்த வீடு , அந்த வெள்ளையனின் முகம் ,காட்டுப் பகுதிகள் எல்லாம் என் மனக்கண்ணில் வந்து கொண்டிருக்கும் போது, சசி தரூர் எழுதிய An Era of Darkness என்ற புத்தகம் Kindle இல் கண்ணில் பட, அதை வாசிக்கும் பொழுது பல இது வரை நான் அறியாத பல பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய  விவரங்களை அவர் அந்த புத்தகத்தில் தந்து இருந்தார்.  சற்று மிகை படுத்துதல் இருந்தாலும் இந்தியாவின் அந்த இருண்ட காலத்தை பற்றி வரலாற்று ஆதாரத்துடன் படிக்கும் பொழுது மனதை பாதிக்க  வைப்பதாக இருந்தது. பிரிட்டானிய ஆட்சி பற்றிய விவரங்கள் ஏராளமாக எழுதப் பட்டு விட்டாலும் சில விஷயங்கள் சற்றே   அதிர்ச்சி அளிப்பதாக எனக்கு பட்டது. சசி தரூர் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் அல்லது அவரது கருத்துக்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ள...