இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஒரு தொகுப்புப் பார்வை
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஒரு தொகுப்புப் பார்வை திரு ஜெயமோகன் அவர்களின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை இரண்டாவது முறையாக படித்தேன். இந்திய தரிசனங்கள் பற்றி அறிய விரும்புவர்களுக்கு நிச்சயமாக ஒரு ஆரம்ப படி நிலை புத்தகமாக அது இருக்கிறது. எந்தத் தத்துவ அறிமுகமும் இல்லாதவர்கள் கூட ஓரளவு எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் நல்ல தமிழில் சிறப்பாக எழுதப் பட்டு உள்ள ஒரு நூல். இதை முதல் முறை வாங்கி படித்து விட்டு வேறொரு நண்பருக்கு பரிசாக கொடுத்த பிறகு, நாம் சரியாக உள் வாங்க வில்லையோ என்ற ஐயத்திலும், நாம் சுருங்க தொகுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் மீண்டும் ஒரு முறை படித்தேன். பிறிதொரு வாசிப்பிற்கான தேவை இருக்கக் கூடாது என்பதற்காக இந்த கட்டுரையை முயற்சி செய்கிறேன். முக்கிய சில பாகங்களை மட்டும் (என்னுடைய பார்வையில்) இங்கே சுருக்கமாகத் தர முயற்சி செய்து இருக்கிறேன். முன்னுரை நூலி...