Gandhi 150 - காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள்
காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள் காந்தி மற்றும் தாகூர் இருவரும் பிறந்து 150 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் நமது தேசம் குறித்த அவர்களின் கருத்துக்கள் பல இன்றைக்கும் விவாதிக்க கூடியதாக இருக்கிறது. இந்திய தேசியமா இந்து தேசியமா என விவாதம் நடை பெற்று வரும் இன்றைய சூழலில் தேசப் பிதாவும் தேச நிர்மாணிப்பில் முக்கிய அறிவுப் பங்காற்றியவருமான குருதேவ் என காந்தி அன்பாக அழைத்த கவி ரவீ ந்திரநாத தாகூர் அவர்களுக்கும் இருந்த தேசியம் பற்றிய உரையாடல்கள் சில மிக முக்கியமானவையாகவும் இன்று நினைவு படுத்தக் கூடியதாகவும் உள்ளது . இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய மூன்று நாடுகளின் தேசிய கீதங்களை எழுதிய கவி தாகூர் அவர்களின் தேசியம் குறித்த பார்வை மிக விசாலமான ஒன்று. கவிஞர்களுக்ககே உரிய கனிவு மற்றும் கன...