Posts

Showing posts from June, 2019
டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதி 7      இந்தியாவில்  பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள்              இஸ்லாமியரின் படையெடுப்பே இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது என அம்பேதகர் குறிப்பிடுகிறார். புத் என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் உருவச்சிலை. எனவே பௌத்த சமயம் என்பது உருவவழிபாட்டு சமயம் என்று எண்ணிய இஸ்லாமியர், உருவ சிலைகளை உடைக்க வேண்டும் என்ற அவர்களின் சமய நோக்கத்திற்கு ஏற்ப பௌத்த விஹாரங்கள்  மற்றும் அதோடு கூட பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்கள் அழித்து ஒழித்து விட்டனர். இப்படி கிட்டத்தட்ட ஆசியா முழுவதிலும் (ஆப்கானிஸ்தான், பாக்த்தீரியா,பார்த்தியா காந்தாரம் சைனீஸ் துர்கிஸ்தான் )பௌத்த மதத்தை  இஸ்லாம் அழித்து விட்டது. ( page 104 )         ஆனால் பிராமணியம் பௌத்தம் இரண்டையும் இஸ்லாம் தாக்கியது. ஒன்று மட்டும் ஏன் நிலைத்து நிற்கிறது (பிராமணியம்) மற்றொன்று அழிந்து விட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் அம்பேதகர் பௌத்தத்தின் வீழ்...