முத்துமீனாட்சி - 1892 ம் வருட தமிழ் புதினம்

தமிழில் மூன்றாவதாக வெளிவந்த நாவல் அ மாதவையா எழுதிய "முத்துமீனாட்சி" படித்தேன். 1892 -ல் தொடராக வந்தாலும் அந் நாளில் விதவை மறுமணம், பெண்கள் கல்வி போன்றவைகள் கதையின் மைய ஓட்டமாக இருந்ததால் ஏற்பட்ட சர்ச்சையில் நிறுத்தப் பட்டு பின் மீண்டும் 20 வருடம் கடந்து சிறிய மாற்றங்கள் செய்யப் பட்டு புத்தகமாக வெளியிடப் பட்டது. 129 வருடம் கடந்தாலும் இன்று வாசிக்கும் போதும் சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறது. ஒரு பிராமண பெண் தனது கதையை சொல்லுவது போல் கதை அமைத்து உள்ளார் ஆசிரியர். இன்றைய பெண்களின் சூழலுக்கும் அன்றைய சூழலுக்கும் தான் எவ்வளவு வித்தியாசங்கள். பெண் கல்வி கல்லாமை , சிறுவயதில் திருமணம், விதவை மறுமணம் அனுமதித்தல் , கணவன் மனைவி வயது வித்தியாசங்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாக திருமணங்கள் நடப்பது போன்றவைகள் இன்றைக்கு அருகிப் போய் உள்ளது. நல்ல சமூக மாற்றங்கள் பல போராட்டங்களுக்கு பிறகு வந்து இருக்கிறது. அன்றைய சூழலில் இருந்து பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைய நாளில் இருந்தாலும் திருமண வரதட்சணை அல்லது டௌரி...