யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ் - நாளைய வரலாறு
.png)
ஹோமோ டியஸ் - நாளைய வரலாறு நூலின் சில கருத்துகள் பற்றி இஸ்ரேலின் வரலாற்றுப் பேராசிரியர் யுவால் நோவா ஹராரியின் இரண்டாவது புகழ் பெற்ற ஹோமோ டியெஸ் நூலைப் பற்றிய சில அவதானிப்புகளை நான் இந்த கட்டுரையில் கொடுத்து உள்ளேன் . அவரது முதல் நூலான ஹோமோ சாபியன்ஸ் போல இதுவும மனித வரலாறு பற்றிய நூலாசிரியரின் அவதானிப்பு. கிட்டத்தட்ட முதல் நூலின் தொடர்ச்சி என சொல்லலாம். மனித குலத்தின் எதிர் காலத்தை பற்றி இன்றைக்கு நம்ப முடியாத பல விஷயங்களை நூல் பேசுகிறது. மனித வாத மதங்கள் வேளாண் புரட்சிக்கு பின் கடவுள் வாதம் பேசும் மதங்கள் தோன்றியது போல அறிவியல் புரட்சிக்குப் பின் மனித வாத மதங்கள் தோன்றின என யுவால் கூறுகிறார். வேறு சில அறிஞர்கள் சொல்வது போல யுவாலும் மார்க்சிசம் போன்ற தத்துவம் அளித்த இயக்கங்களை மனித வாதம் பேசுகின்ற மதங்கள் என்றே குறிப்பிடுகின்றார். பொதுவாக மதங்கள் சொல்கின்ற கடவுள் ...