மரப் பசு - தி ஜானகி ராமன்

மரப் பசு - தி ஜா ரா

        தி ஜா வின் அம்மா வந்தாள் வாசித்த பின்னர் அவருடைய  மற்றொரு மாஸ்டர் பீஸ் நாவல் மரப்பசு ஆர்வத்துடன் வாங்கி படித்தேன். கதை ஒரு பெண்ணுடைய பார்வையில் இருந்து சொல்ல பட்டு இருந்தது. சற்றே பழைய நடை , 50 வருஷங்களுக்கு முந்தைய களம். உள் நுழைந்து செல்ல கொஞ்சம் கடினமாக இருந்தாலும் , கதை ஓட்டம்  ஒரு கட்டத்தில் நம்மை முழுமையாக இழுத்து கொண்டு விடுகிறது.  தமிழின் முதல் பெண்ணீய கருவை கொண்ட கதை என்று பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். இன்றும் கூட இவ்வளவு சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை காண்பது அரிது தான்.  கதை நாயகி அம்மிணி போல ஒரு பெண் இருந்து வெளியே தெரிந்தால் அவர்களுக்கு என்ன மரியாதையை இன்றைய சமூகம் கொடுக்கும் என்பது தெரிந்ததே.

      தஞ்சை மாவட்ட ;பகுதியை சேர்ந்த பிராமண குடும்பத்து பெண்,
கும்பகோணத்தில் உள்ள அவரது பெரியப்பா வீட்டில் வளர்கிறாள்.
சிறு வயதில் இருந்தே சுதந்திர சிந்தனையோடு கூடிய புத்திசாலியாகவும்
எல்லா வற்றையும் சிரித்த படி எதிர் கொள்ளும் பெண்ணாக வளர்கிறாள்.
மிக சிறு உடைகள் எதற்கு என்று உதறி விட்டு ஆடை இல்லாமல் வலம் வருவதை விரும்புகிறாள். பக்கத்துக்கு வீட்டில் சிறு வயதில் விதவை ஆகி
விடும் கொடுமையை பார்த்து விட்டு திருமணத்தை வெறுக்கத் தொடங்குகிறாள். நிறைய புத்தகங்கள் படிப்பவளாக இருப்பதால் நவீன கால மார்க்சிய சிந்தனைகளை உள் வாங்கும் அவள் சற்றே பெரியவள் ஆனா பிறகு
ஒரு பெரிய பாட்டு வித்வான் ஆதரவோடு தனியாக சென்னை வந்து விடுகிறாள். ஏராளமானவர்களோடு நட்பு கொள்கிறாள். சிலரோடு உறவும் வைத்து கொள்கிறாள். மிகுந்த அதிர்ச்சிக்கு பெரியப்பா உள்ளாகி அவளை அடித்து நொறுக்குகிறார். அவளின் உறுதியை பார்த்து ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பி செல்கிறார். அவளிஷ்டப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறாள். அவளோட அனுபவங்களுடன் கதை முன் நகர்கிறது.


இன்று படிக்கையிலும் சுவாரஸ்மாக உள்ளது என்பதையும் இன்றும் இவ்வகை பெண் சுதந்திரம் என்பது நடைமுறைக்கு வரவில்லை எனவும் காண முடிகிறது. இன்றும் கதாநாயகியின் வாழ்வு பற்றிய எண்ணங்களும்  முடிவுகளும்  புரட்சிகரமானதாக இருந்து கொண்டு இருக்கிறது.  பெண்ணிற்கான இலக்கணம் திருமணமும், தந்தையின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து கணவனின் பாதுகாப்பிறக்குள செல்வதே சரியான வழி என்றே சொல்லித் தரப்படுகிறது. இந்த விதியை மீறுபவர்கள் மிக மிகச் சிலராக இருக்கிறார்கள். மீறும் சிலரும் மரியாதை குறைவாகவே சமூகத்தில் பார்க்கப்படும் நிலை உள்ளது. மேற்கில் இந்த நிலைதான் உள்ளதா என தெரிய வில்லை. இன்று மிகச்சில பெண்களால் பல சமுதாய கட்டாயங்களை மீறி தனியாக வாழும் முடிவை எடுக்க வைத்து இருப்பது அவர்களது பொருளாதாரச் சுதந்திரம் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. அப்பட்டமான சுதந்திர பெண் சிந்தனைகள் பற்றி 50 வருடங்கள் முன்பு திஜா போன்ற வர்கள் எழுதி இருப்பது நிச்சயம் ஆங்கில இலக்கிய பாதிப்பாகத் தான் இருக்க முடியும் என நான் நினைக்கிறேன். பெண்ணிற்கான முழு சுதந்திரம் எதோ ஒரு நாளில் கிடைக்கையில்  இம்மாதிரியான ஆக்கங்கள் அதற்கான விதைகளை தூவியவையதாக  நினைவு கூறப்படும்.




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்