டாக்டர் அம்பேதகர் - நூல் தொகுப்பில் இருந்து - தொகுதி 1
டாக்டர் அம்பேதகர் - நூல் தொகுப்பில் இருந்து - தொகுதி 1 இந்தியாவில் சாதிகள் தோன்றிய விதம் சாதி அமைப்பை பற்றிய இந்த பகுதியில் அம்பேதகர், சாதி எப்போது தோன்றி இருக்க கூடும் என்ற ஊகங்களுக்குள் செல்லாமல், அது எந்த வகையில் புழக்கத்திற்கு வந்து இருக்கிறது என்பதை விளக்குகிறார். அக மண முறை திருமணம் என்பதே சாதி கட்டமைப்பிற்கு முதல் காரணம் என குறிப்பிடும் அவர், இந்த Endogamous திருமண முறை தீவிரமாக கடை பிடிக்க படுவதால் சாதி அமைப்பு தோன்றியதாகவும், சமூகத்தின் மேல் தட்டில் இருந்த புரோகித அல்லது பிராமண சாதிகள் இந்த அக மண முறையை தோற்றுவித்த பின்னரே மற்ற பிரிவினரும் அவர்களை பார்த்து பின் பற்ற தொடங்கி இருக்கலாம் என கூறுகிறார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது என சொல்லி உள்ளனர். இது ஒரு எளிமையான கற்பனை மட்டுமே என குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு மாறாக " எல்லா இளவரசர்களும் - ஆரிய மற்றும் திராவிட என்று குறிப்பிட படுபவர்களும் ஒரே இனத்தவர்கள...