டாக்டர் அம்பேதகர் - நூல் தொகுப்பில் இருந்து - தொகுதி 1

இந்தியாவில் சாதிகள் தோன்றிய விதம்
இந்தியாவில் சாதிகள் தோன்றிய விதம்
சாதி அமைப்பை பற்றிய இந்த பகுதியில் அம்பேதகர், சாதி எப்போது தோன்றி இருக்க கூடும் என்ற ஊகங்களுக்குள் செல்லாமல், அது எந்த வகையில் புழக்கத்திற்கு வந்து இருக்கிறது என்பதை விளக்குகிறார்.
அக மண முறை திருமணம் என்பதே சாதி கட்டமைப்பிற்கு முதல் காரணம் என குறிப்பிடும் அவர், இந்த Endogamous திருமண முறை தீவிரமாக கடை பிடிக்க படுவதால் சாதி அமைப்பு தோன்றியதாகவும், சமூகத்தின் மேல் தட்டில் இருந்த புரோகித அல்லது பிராமண சாதிகள் இந்த அக மண முறையை தோற்றுவித்த பின்னரே மற்ற பிரிவினரும் அவர்களை பார்த்து பின் பற்ற தொடங்கி இருக்கலாம் என கூறுகிறார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது என சொல்லி உள்ளனர். இது ஒரு எளிமையான கற்பனை மட்டுமே என குறிப்பிடும் ஆசிரியர், அதற்கு மாறாக " எல்லா இளவரசர்களும் - ஆரிய மற்றும் திராவிட என்று குறிப்பிட
படுபவர்களும் ஒரே இனத்தவர்கள். தோலின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது வெகு காலத்திற்கு முன்பே கைவிடப்பட்டுவிட்டது." என டாக்டர் கேட்கர் என்பவரை மேற்கோள் காட்டி அதை சரியான வாதம் எனவும் கூறுகிறார். (பக்கம் 32)
இனமும் இந்திய சாதி அமைப்பும்
இந்தியாவில் உள்ள எல்லா சாதிகளும் ( பிராமணர் உள்பட) அந்நிய கலப்பு உள்ளவையே என டி ஆர் பந்தார்க்கர் என்பவர் குறிப்பிடுவதாக அம்பேத்கார்
மேற்கோள் காட்டி மேலும் சாதி முறை இன கலப்பையோ ரத்த தூய்மையை
காப்பதற்கோ உருவாகவில்லை. இந்தியாவில் உள்ள இனங்கள் எல்லாமே
ரத்தத்தாலும் கலாச்சாரத்தாலும் இரண்டற கலந்ததற்கு நெடு நாள் பிறகே சாதி அமைப்பு தோன்றியதாகவும் கூறுகிறார். அம்பேத்காரின் கருத்து இவ்வாறு இருப்பதை சொல்லாமல் எப்போதும் சாதிகளுக்கு இடையே இன பிரிவினை வாதத்தை (ஆரிய திராவிட ) சொல்லி கொண்டு இருக்கும் அமைப்புகளின் நோக்கம் சமூக ஒற்றுமை அல்ல என்பது தெளிவாகிறது. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இன பாகுபாடு என்பதும், பல்வேறு சாதிகளும் வெவ்வேறு இனங்களே என்று சொல்வதும் உண்மையை திரிப்பதாகும் என கூறும் அவர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள எல்லா சாதியினரும் ஒரே இனத்தவர் தான் என தீர்மானமாக குறிப்பிட்டு உள்ளார். (பக்கம் 69) அம்பேத்காரின் இந்த கருத்துக்கள் இனப் பிரிவினை அடிப்படையில் அரசியல் செய்வோருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கும் . இந்தியாவில் எங்குமே பிரிவினை வாதிகள் இந்திய இனங்களின் ஒன்று பட்ட தன்மையைப் பற்றி சொல்லாமல் அம்பேத்காரின் கருத்துக்களில் அவர்களுக்கு வசதியாக உள்ளவற்றவையே சொல்லி அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தெளிவு. இடது சாரிகளும் இந்த வகையான போக்கிற்கு விதிவிலக்கு அல்ல என்பது துரதிர்ஷ்டவசமான ஒரு உண்மை..
இந்து சமூகம் பற்றிய கருத்து
சாதி என்பது பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகின்ற ஒன்றாக இல்லை.
இன மேம்பாட்டிற்கும் உதவ வில்லை. மாறாக இந்துக்களை சிதைத்து
சீரழிக்கவே பயன் பட்டு இருக்கிறது. முக்கியமாக இந்து சமூகம் என்பதே வெறும் கற்பனையான ஒன்று தான். முகமதியரின் படை எடுப்புக்கு முன்பு எந்த சம்ஸ்கிருத நூலிலும் இந்து என்ற வார்த்தை குறிப்பிட பட வில்லை எனவும் இந்துக்களுக்கு பொதுவான ஒரு சமூக சிந்தனை இல்லாத காரணத்தால் அவர்கள் அதை பற்றி எண்ணவே இல்லை ஆகவே இந்து சமூகம் என்ற ஒன்றே இல்லை. பல சாதிகளின் தொகுப்பே இந்து சமூகமாக அழைக்க படுகிறது. (பக்கம் 72) அம்பேத்கார் அவர்களது இந்த
கருத்து இந்திய ஆய்வாளர்கள் பலரது கருத்தாகவும் இருக்கிறது. இந்து என்ற மதமும் சமூகமும் பிரிட்டிஷ் ஆட்சி வந்த பிறகு, நாடு முழுவதும் ஒற்றை அதிகாரம் வந்ததால் தொகுத்து கொண்டு விட்ட ஒன்றாக கருத இடம் இருக்கிறது. இந்துக்கள் இடையே இருந்த பண்பாட்டு ஒற்றுமையும் (சாதி அமைப்பு, புராண கதைகள், புனித நதிகள், தெய்வங்கள் உள்பட) காங்கிரஸ் போன்ற pan indian அமைப்பும் காந்தி போன்ற ஆளுமைகளும் இந்த பிணைப்பிற்கு உதவி இருக்கலாம்.
சதுர் வர்ணமும் பிளாடோவின் குடியரசு தத்துவமும்
சாதியின் அடிப்படை தத்துவம் என்பது பிறப்பின் வழி வருவது, வருணத்தின் தகமை அடிப்படையிலானது. ஆகவே இரண்டும் ஒன்றுக்கொன்று வேறானவை. வர்ண முறையை நிறுவுவதற்கு
கூட சாதி அமைப்பை உடைக்க வேண்டும் என அம்பேத்கார் குறிபிடுகின்றார்.
மக்கள் அனைவரையும் நான்காக பிரிக்க வேண்டும் என சொல்கிற சதுர்
வருண முறையும் பிளாட்டோ கூறுகிற மூன்று பிரிவுகளை சொல்கிற லட்சிய சமூகத்திற்கும் ஒற்றுமை உள்ளது. இந்த அமைப்புகளின் பெரிய குறை, மக்களை தெளிவாக மூன்று அல்லது நான்கு பிரிவுகளாக வரையறுத்து எளிதாக்கும் முறை. இது ஒரு மேல் எழுந்த வாரியான ஒரு அமைப்பு என அம்பேத்கார் நம்புகிறார். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு மனிதனையும் ஒரு தனி பிரிவாகவே கருத வேண்டும். (unique) இப்படி தான் நவீன விஞ்ஞானமும் வகுப்பதாக அவர் கூறுகிறார். (பக்கம் 87,88)
சதுர் வர்ண அமைப்பும் பெண்களும்
சதுர் வர்ண அமைப்பில் பெண்களின் நிலை என்பது தெளிவற்று உள்ளது என கூறும் அம்பேத்கார் அவர்களை கணவர்களது வர்ணத்தில் சேர்ப்பதா அல்லது தகைமை பொறுத்து சேர்ப்பதா என்பது முடிவு செய்ய முடியாத விஷயம் என குறிப்பிடுகிறார். ஆகவே இந்த முறை பொருந்தாது என்ற முடிவுக்கே அவர் வருகிறார். பெண்களை எந்த இடத்திலும் பொருத்த முடியாத சதுர் வர்ண முறைமையை மூடர்களஆதரிப்பர் என்பது அவர் முடிவாக சொல்கிறார். ( பக்கம் 89, 90)
இந்து சமூக சீர்திருத்தமும் சாதி ஒழிப்பும்
சாதியை ஒழிக்க முற்படுவதற்கு முன் கிளை சாதிகளை எளிதாக ஒன்றாக இணைக்க முடியம் என சொல்பவர்களை மறுக்கும் அம்பேத்கார்,
கிளை சாதிகளுக்கு இடையே அந்தஸ்திலும் பழக்க வழக்கங்களிலும் ஒற்றுமை .பெரியதாக இல்லை என்கிறார். அதற்கு உதாரணமாக, வட இந்திய மத்திய இந்திய பிராமணர்கள் தக்காணத்திலும் தென் இந்தியாவிலும் உள்ளவர்களை விட சமூக அந்தஸ்தில் மிகவும் கீழாக இருக்கிறார்கள். வைஸ்யர்களும் காயஸ்தர்களும் ஒப்பு நோக்க செல்வாக்காக இருக்கிறார்கள். உணவு விஷயத்தில் தென் இந்திய பிராமணர்கள் சைவ உணவு உண்பவர்களாகவும் காஷ்மீர் வங்காளதில் உள்ளவர்கள் அசைவ உணவு உண்கிறார்கள். ஆகவே கிளை சாதி இணைப்பு சாத்தியம் இல்லை மேலும் பயனற்றதும் ஆகும் என்று அம்பேத்கார் கருதுகிறார்.. (பக்கம் 98)
சாதிகளை இல்லாமல் செய்வதற்கு மக்களை குறை கூறி பயன் இல்லை.
சாஸ்திரங்களை புனிதம் என நம்புவதை ஒழிப்பதே இதற்க்கு சரியான வழி.
(பக்கம் 100)
தத்துவம் விதிகள் மதம்
பொறுப்புடன செயல் பட வேண்டுமெனில் மதச் சடங்கு சம்பிரதாயங்கள்
தத்துவதோடு கூடியதாக இருத்தல் அவசியம். அப்படி இல்லாமல் அவை வெறும் விதிகளாகவே இருக்கும் பொது, அது மதம் என்ற தகுதியை இழந்து விடுகிறது. இந்துக்கள் மதம் என சொல்வது விதிகளின் தொகுப்பாக வெறும் கட்டளைகளை மட்டும் கொண்டதாக உள்ளது. எனவே இந்து மதம் ஒரு மதம் என்று சொல்வதற்கு முடியாது. அநீதிகள் பலவற்றை கொண்டுள்ள இந்த அமைப்பு அழிக்க பட வேண்டும் என கூறுவது மதத்திற்கு விரோதமான செயல் அல்ல. இந்த போலியான மத முகமூடியை கிழித்து எறிவது ஒரு கடமையாக கருத வேண்டும். ( பக்கம் 112)
மதத்தின் தேவை மற்றும் இந்து சீர்திருத்தம் பற்றி அம்பேத்கர்
விதிகளின் தொகுப்பாக மதம் இருப்பதனால் அப்படிப்பட்ட ஒரு அமைப்பை கண்டனம் செய்யும் அம்பேதகர், அதனால் மதமே தேவை இல்லை என்று கூற வில்லை. பழங்கால விதிகளில் ஆன அமைப்பு அழிக்கப் படும் அதே வேளையில், அதற்கு பதிலாக தத்துவங்களால் ஆன ஒரு மதம் உருவாக்கப் பட வேண்டும் என குறிப்பிடுகிறார். மதம் மிகவும் சமூகத்திற்கு தேவை என சொல்லும் அவர், இந்து சமய சீர்திருத்தமாக பின் வரும் விஷயங்கள் இடம் பெறல் நல்லது எ விழைகிறார். 1) அனைத்து இந்துக்களும் ஏற்கத்தக்க ஒரே ஒரு பிரமாண புத்தகம் இயற்ற வேண்டும். இதை தவிர, வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் யாவும் புனிதம் ஆனவையாகவும் அதிகாரபூர்வமானதாகவும் கருதப்பட கூடாது என சட்டம் கொணர வேண்டும். இவை பற்றிய பிரச்சாரம் தண்டனைக்குரிய குற்றமாக இருக்க வேண்டும். 2) புரோகிதத் தொழில் பரம்பரையாக இருக்க கூடாது. 3) புரோகிதர் அரசின் பணியாளர் ஆக இருக்க வேண்டும். 4) ICS போல புரோகித தொழில் அரசால் ஒழுங்கு படுத்த பட வேண்டும்.(பக்கம் 113)
இந்த மாதிரியான மத சீர்திருத்தங்கள் செய்யப்படுவதால் மூலமே
சாதி அமைப்பும் பிராமணியமும் அழிக்கப்பட முடியும். எல்லா தரப்பினரும் புரோஹிதர் ஆக வகை செய்வதன் மூலம் ஒரு ஜனநாயகத் தன்மை ஏற்படும்.
ப்ராமணீயத்தை ஒழித்தால் தான் இந்து மதத்தை காப்பாற்ற முடியும் என்பதும் அம்பேதகருடைய சனாதன மத சீர் திருத்த கருத்தாக சொல்கிறார்.

Comments