காந்தி 150 - பகத் சிங்கும் காந்தியும்

பகத் சிங்கும்  காந்தியும்

           நமது சுதந்திர போராட்ட வீரர்களில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் கொண்டாடப்படுகிற மற்றும் அனைவராலும் அன்புடனும் பெருமையுடனும் நினைவு கூறத் தக்க ஒருவர் என்றால் அது பகத் சிங் மட்டுமே. பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் வீர தீரத்திற்காகவும் தியாகத்திற்காகவும் அவர் இரு தேசங்களிலும் போற்றப் படுகிறார்.அவருக்கு முன்னும் பின்னும் சுதந்திர போரில் நிறைய பேர் உயிர் தியாகம் செய்து இருந்தாலும் பகத்சிங் மட்டும் இன்னும் தனியான ஓர் ஆளுமையாக இரு நாட்டு மக்கள் மனதில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க முடிகிறது. காந்தி நேரு போன்றோர் பாகிஸ்தானில் போற்றப்படுவது இல்லை அவ்வாறே ஜின்னா அவர்கள் இந்தியாவில் கொண்டாடப்படுவது இல்லை
என அனைவரும் அறிவோம்.

           மாறாக பகத் சிங் இந்தியா மட்டும் இன்றி  பாகிஸ்தானிலும் ஒரு விடுதலை நாயகனாக  இன்றளவிலும் கொண்டாடப்படுகிறார் .பாகிஸ்தானை அடிப்படை வாத அரசியல் முழுமையாக ஆட்கொண்டு விட்ட இந்த நேரத்திலும் பகத் சிங் அங்கு குறிப்பிடத்தக்க அளவில் நினைவு கூறப்படுவதும் அவருக்காக மக்கள் குரல் எழுப்புவதும் இடது சாரி அரசியல்,  மத அடிப்படை வாதத்தை மீறி அங்கு முன்னெடுக்க முயல்வதன் வெளிப்பாடு எனலாம். (scroll.in article 23.3.17)

        இது பகத்தின் அரசியல் பற்றிய கட்டுரை அல்ல . காந்தி அவர்கள் பிறந்த 150 வருடங்களை ஒட்டிய ஒரு கட்டுரை. ஆகவே  பகத் சிங் பிரிட்டிஷாரால் தூக்கிலிட்டு கொல்லப் பட்ட போது அன்றைக்கு செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த காந்திஜி,  தூக்கு தண்டனையை தடுக்க இயலாமைக்கான காரணங்களை சரியான பின்னணியில் அறிய முயல்வதே இந்த கட்டுரையின் நோக்கம். (காந்தி இர்விங் ஒப்பந்தம் பற்றிய குறிப்புகள் துணையோடு )  காந்தி அவர்களின் பல்வேறு கால கட்டத்திய கருத்துகள், நடவடிக்கைகள் சரியாகவோ அல்லது தவறாகவோ அவரவர் அரசியலுக்கு ஏற்ப விமர்சிக்கப் படும் வேளையில், அதில் முக்கியமானவற்றில் ஒன்று பகத் சிங் பற்றிய சர்ச்சை. அவைகள் இன்று வரையில் ஓய வில்லை என்பதையும் நாம் காண்கிறோம்.

பகத் சிங் மீதான குற்றசாட்டு

      பகத் சிங்கும் ராஜகுருவும் சேர்ந்து 21 வயதான இளம் பிரிட்டிஷ் இந்திய  போலீஸ் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை லாகூரில் சுட்டு கொன்றது அவர் மீது சுமத்த பட்ட முக்கிய குற்றம். லாலா லஜ்பத் ராய் அவர்களை கொன்றதற்காக பழி வாங்கும் நோக்கத்துடன் பிரிட்டிஷ் போலீஸ் சூப்பரின்டென்டென்ட் "ஜேம்ஸ் ஸ்காட்" என்று நினைத்து சாண்டர்ஸ் கொல்லப் பட்டார் என கூறப்பட்டது . இந்த சம்பவத்திற்கு 4-5 மாதங்களுக்கு பின் பகத் சிங்கும் அவர் கூட்டாளி படுகேஸ்வர் தத் என்பவரும் டெல்லி மத்திய அசெம்பிளியில் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததுடன் ஆங்கிலேயர்க்கு எதிரான முழக்கங்களை எழுப்பி விட்டு கைதாயினர்.
இளம் போலீஸ் அதிகாரியை கொன்றது பகத் சிங் அல்ல எனவும், கம்யூனிச சோசியலிச மனப்பான்மை கொண்டு இருந்த, வளர்ந்து வரும் இளம் தலைவரை விரும்பாத பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை கொடுப்பதற்காக அந்த கொலை வழக்கை அவர் மீது ஜோடித்ததாக  கூறுவோரும் உண்டு. அன்று இருந்த பெருவாரியான மக்கள் எதிர்ப்பை எல்லாம் மீறி பகத் சிங்கும் அவரது கூட்டாளிகளும் 23.3.1931 அன்று இரவு 7 30 மணிக்கு தூக்கில் போடப்பட்டனர். ( நீதி மன்ற வளாகத்தில் பகத் எழுப்பிய கோஷங்கள் கட்டுரையின் இறுதியில்)

       (சமீபத்தில் பிரிட்டிஷ் உளவாளி ஒருவரின் நூலில், பகத் சிங் ஆகியோர்
தூக்கில் இடப்பட்ட பின் சாவதற்கு முன் தூக்கு கயிற்றில் இருந்து இறக்க பட்டு உயிருடன் ஜான் சாண்டர்ஸ் -ன் உறவினர்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் ஆத்திரமும் வெறியும் தீர துப்பாக்கி குண்டுகளால் துளைத்து சல்லடையிட்டதாகவும் எழுதுகிறார்.- (Name of Book - Some hidden facts -
Martyrdom of Shaheed Bhagat singh.)

   
பகத் சிங் விவகாரத்தில் காந்தி மீதான பழிகள்

      காந்தி வேண்டும் என்றே தாமதமாக பகத் சிங் விஷயத்தில் தலையிட்டார். அவர் நினைத்து இருந்தால் பகத்தை தூக்கில் இருந்து காப்பாற்றி இருக்கலாம். அவருடைய அரை வேக்காட்டு அஹிம்சை கொள்கை அப்படி செய்ய விடாமல் தடுத்து விட்டது. அப்போது காந்திக்கு நெருக்கமாக இருந்த  வைஸ்ராய் லார்ட் இர்விங் -விடம் ஒப்பந்தம் கையெழுத்து இடுவதற்கு முன் நிபந்தனை விதித்து காரியத்தை முடித்து இருக்கலாம். இப்படிஎல்லாம் குற்றசாட்டுகள் காந்தி மீது அன்றும் இன்றும் சுமத்தப் படுகிறது..

      பிப்ரவரி 17 1930 தொடங்கி மார்ச் 5 ஒப்பந்தம் இறுதி ஆகும் வரையில் தொடர்ந்து காந்தி இரவினொடு பகத் சிங்கிற்காக மன்றாடி இருக்கிறார். அன்றைய குறிப்புகளை வாசிக்கும் எவருக்கும் அது விளங்கும். அன்றைய பிரிவி கௌன்சில் மரண தண்டனையை நிறுத்த மறுத்த பிறகு, பொது மக்களின் கருத்தை வலியுறுத்தி அரசை நிர்பந்தம் செய்வதே ஒரே  வழி என காந்தி கருதுகிறார். ஆகவே  தூக்கை தள்ளி போடவோ அல்லது இடை நிறுத்தவோ தான் அவர் முயன்றார்.தண்டனையை நிறுத்திய பின் புரட்சியாளர்களிடம் வன்முறைக்கு எதிரான உறுதி மொழி பெற்று, அதை கொண்டு மேலும் முன் முயற்சி செய்யும் அவரின் திட்டம் ஆசீப் அலி மூலம் பின்னாளில் தெரிய வருகிறது.

     காந்தி இரவின் உடன்படிக்கைக்கு பகத் விடுதலையை ஒரு நிபந்தனையாக அவர் விதித்து இருக்கலாம் தான். அடிமையாக உள்ள ஒரு நாட்டில் எப்போதாவது வரும் வாய்ப்பை நழுவ விட விரும்பாமல் அவர் அதை செய்ய வில்லை. தண்டனைக்கு சில வாரங்கள் முன்பு தான் விவகாரத்தில் காந்தி தலையிட்டார் என்பது பொய். மே 4, 1930 அன்று அதாவது பகத் கைதிற்கு முன்னரே வைசிராய்க்கு காந்தி கடிதம் எழுதி சிறப்பு நீதி மன்றம் அமைத்து வழக்கை விசாரிப்பதை கண்டிக்கிறார்.

    இறுதியாக மக்கள் நிர்பந்தத்திற்கும் காந்தி தொடர்ந்து அளித்த அழுத்தத்தின்
காரணமாக வைஸ்ராய் மனம் ஊசல் ஆட தொடங்கும் போது பஞ்சாப் மாகாண அனைத்து அதிகாரிகளும் ராஜினாமா செய்வோம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. வேறு வழி இன்றி அவர்களின் நிர்பந்தத்திற்கு பணிகிறார்  வைஸ்ராய்.  ஒரு நாள் முன்பாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப் படுகிறது.

     பகத் சிங்கும் மார்ச் 20 1930 அன்று கவர்னருக்கு எழுதும் கடிதத்தில் தன்னை போர் குற்றவாளியாக நடத்தி தூக்கில் இடாமல் சுட்டு கொள்ளும் கோருகிறார்.
தன வீர மரணத்தால் புரட்சி கனல் ஏற்ற துடிக்கும் இளைஞன், பழி தீர்க்க காத்திருக்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம், தங்கள் நிலையை வலுப்படுத்தி கொள்ள விழையும் ஒரு அரசு, சமரசம் அற்ற புரட்சியாளர்கள் ஆகியவற்றுக்கு  இடையே முரண் பட்ட கொள்கை உடைய காந்திஜி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார் என்றே கூறலாம்.

      ( வரலாறு இவ்வாறாக பதிவுகள் செய்து இருக்க பகத்தின் மரணத்திற்கு காந்தியே காரணம் என்பதாக அவரின் சரிதையை பதிவு செய்த ஆசிரியர்
G S தியோல் கருதுகிறார். மற்றொரு ஆசிரியர் A G நூரானியோ  காந்தி மட்டுமே பகத் சிங்கை காப்பாற்றி இருக்க முடியும் ஆனால் அவர் அதை செய்ய வில்லை என்ற முடிவுக்கே வருகிறார்.)

 // " On January 21, 1930, the accused in the Lah0re Conspiracy Case appeared in the court wearing red scarves. As soon as the magistrate took his chair they raised slogans - "Long Live Socialist Revolution", "Long Live Communist International", "Long Live People" "Lenin's Name Will Never Die", and "Down with Imperialism". 

♦ Bhagat Singh then read the text of this telegram in the court and asked the magistrate to send it to the Third International : - 

" ON LENIN DAY WE SEND HEARTY GREETINGS TO ALL who are doing something for carrying forward the ideas of the great Lenin. We wish success to the great experiment Russia is carrying out. We join our voice to that of the international working class movement. The proletariat will win. Capitalism will be defeated. Death to Imperialism." //

♦ ^ These were Bhagat Singh's words . The text of the telegram was published in the tribune on Jan 26th 1930 .


References; 1. Gandhitoday.in website - articles on gandhi and bhagat singh 

                   2. Tamil hindu article  : பகத் சிங் காந்தி - உண்மைகள் என்ன   
                                                       23.03.2015
                   3. Solvanam website Article - பகத் சிங் மரணம் மறைக்க பட்ட உண்மைகள் 
                                                                 16.08.2012                       
                  4. News site : Scroll.in article on Bhagat singh dt 23.3.17
                   
                 5.   Indian Express article : : Bhagat singh was critical of /RSS - Prof Irfan Habib - 31.12.2018
                  6. mkgandhi.org website article - What Gandhi did to save Bhagat singh                                    
                   



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்