கொடைமடம் - நாவல் வாசிப்பு
நான் மிக விரைவாக படித்து முடித்த புத்தகம் சாம்ராஜ் அவர்கள் எழுதிய கொடைமடம். படிக்க தொடங்கி இரண்டு தினங்களில் 600 பக்கங்களை கடப்பது என்பது எனக்கு ஒரு சாதனை தான். சமீபமாக ஒரு பத்து பக்கம் வாசித்தால் எனக்கு தூக்கம் கண்ணைக் கட்டி கொண்டு வந்து கொண்டு இருந்த நேரத்தில் படிக்க தொடங்கிய புத்தகம் இது. வாசித்த மூன்று நாளும் வேறு எண்ணங்களே இல்லை. கதை மாந்தர்கள் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தனர் . ஆகச் சிறந்த ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் ஒரு புத்தகம். சந்தேகம் எதுவும் இல்லை.
இடது சாரி இயக்கத் தலைவர்கள் மத்தியில் 80 கள் 90 களில் கதை ஓட்டம் செல்கிறது. முக்கிய கதை மாந்தர்கள் ஜென்னி முகுந்தன். அவர்கள் வழியே கதை ஓட்டம் பெரும்பகுதி சென்றாலும் ஏராளமான கிளை துணைக் கதைகளும் விரவிக் கிடக்கின்றன. அவைகள் ஏதோ ஒரு வகையில் main storyline உடன் தொடர்பு உள்ளது. Common thread is there. அதில் பொதுவான அம்சம் இடதுசாரிகள் அல்லது பெண்கள் என்பதாக இருக்கிறது.
கதையின் சிறப்பு சுவாரஸ்யம் குறையாமல் ஆசிரியர் சொல்லி செல்லுவது என்றாலும் கூட அதில் பல இடங்களில் உள்ள அதீதமான எள்ளல் tone சற்றே நெருடலாக இருந்தது. இடது சாரிகள் மீது உயர் எண்ணங்கள் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் ஒருவர் இயக்கத்தை உயிர் மூச்சை விட மேல் ஆனதாக கருதி செய்யும் தியாகங்களை கேலி கிண்டலடிக்கும் வகையில் எழுதியிருக்கிறார். இதை என்ன என்று சொல்வது? இடது சாரி கட்சி நண்பர்களுக்கு இந்த கதையை அர்ப்பணிக்கிறேன் என்று வேறு நூல் வெளியீட்டில் சொல்கிறார்.
இந்த கதையை 90 களில் veli வந்த
ஜெயமோகனின் "பின் தொடரும் நிழலின் குரல்" உடன் ஒப்பீடு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாக நான் கருதுகிறேன்.
இரண்டிற்கும் கதைக்களம் கிட்டத்தட்ட
ஒரே களம் தான். அதற்கு இடது சாரிகள் மத்தியில் வந்த எதிர் வினைகள் இந்த நூலுக்கு வந்த மாதிரி தெரியவில்லை. தோழர் தியாகு நூல் அறிமுகம் செய்து சிலாகித்துப் பேசுகிறார். ஜெயமோகன் கதையில் சற்றே தத்துவம் விரிவாக அலசிப் பட்டு இருக்கும். எந்த கேலி கிண்டலும் அதில் இருக்காது. ஆனாலும் கடுமையான எதிர் வினையை அந்த நூல் சந்தித்தது. இன்றும் அதை கசப்பும் ஏளனமாக இடது சாரிகள் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. புதினம் தான் என்ற சலுகை எதுவும் அதற்கு கிட்டவில்லை.
CPM தலைவர் W R வரதராஜன் தற்கொலை சற்றே நினைவு படுத்தும் செம்முகில் தோழர் கதை கிளை கதையாக கூறப்படுகிறது. மதுரை கல்லூரி மாணவர்கள் மறியல் செய்வதாக ஓர் இடம் வருகிறது. அவர்கள் தரப்பு கோரிக்கை நிறைவேற்றுவதற்கு ஒப்புக் கொண்ட பின் மீண்டும் Nicaragua நாட்டில் உள்ள இடது சாரி தீவிரவாத கைதியை விடுவித்த பின்னரே மறியல் முடியும் என போராட்ட மாணவர்கள் சொல்வதாக இருக்கும். Did the left controlled movements take such ridiculously irresponsible stances anywhere? Extremely exaggerated, I think.
வேறு ஒரு கிளை கதையில் magic செய்யும் ஒரு தோழர் cancer பாதித்த குழந்தைகளுக்கு நிகழ்ச்சி செய்தார் என்ற காரணத்தால் கட்சியை விட்டே நீக்கப் படுகிறார். அந்த குழந்தைகள் வைத்தியம் பார்க்கும் மருத்துவ மனை கிறித்துவ missionary அமைப்பு என்பதை காரணம் காட்டி அவர் வெளியேற்றப் படுகிறார்.
The author does not use the names of main stream left parties like cpm or cpm. He gives new names to avoid controversies. கட்சி பெயர்கள் பற்றி சொல்லும் போது ஒரு கட்சி socialism என்று ஆங்கில பேரையும் மற்றும் ஒரு பிரிவினர் அதன் தமிழ் பெயரான பொது உடமை கட்சி என்று இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம், குழந்தைகள், காதல் மற்ற கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு இடது சாரிகள் hypocrisy அல்லது குழப்பம் இந்த கதை அப்பட்டமாக தோல் உரித்து காட்டுகிறது. Mainstream கட்சிகள் அப்படி இல்லை என்றே நான் நினைக்கிறேன்.
கட்சி கட்டுபாடு ஒழுக்கம் என்ற பெயரில் கட்சி முழு நேர உறுப்பினர்களை அடிமைகள் போல் treat செய்யும் என்பது சொல்லப்படுகிறது. உண்மையில் naxal இயக்க நடைமுறையில் இவ்வாறு இருக்க வாய்ப்புண்டு.
1 The portrayal of Semmugil character and his treatment at the hands of party leadership which leads to break up with wife and suicide eventually.
2 How Marxist workers discouraged from raising questions . Eg Sudhakar alias RK. But he comes out early not losing anything.
3 How silly party can go when dealing with religious institutions..eg Magician character
4 The inflexibility of Jenny while dealing with love and family. So she loses another love in her life. It is because of her Marxist literature studies, it seems. Not pragmatic enough for taking life's decisions. So message is if you study communist literature you won't importance or primacy to other's views. You will always try to change other's.
5 The hypocrisy and selfish portrayal of party leaders. Eg The comrade who do money lending
Business.
6. It was really funny when every time Jenny asks Mukundan to lead a life of core Marxist believer full time. Living life simple, reading Marx Engels core philosophy books daily , eating Fruit based diet two times a day ( part of Marxist belief ) etc.
It is not that a creator doesn't have the freedom to write about all these things. He certainly has the liberty. Literature has the freedom to analyse and dissect anything. True. But after exposing all the negatives of left movements during a certain period, one cannot claim to have written it for the benefit of the movement. Though many good moments are also portrayed, I feel the bad moments will attract more strongly.
இடது சாரிகள் மிக கடுமையாக சரிவு நோக்கி செல்லும் இந்த நூற்றாண்டில் இந்த நாவல் போன்ற எதிர் மறை அம்சம் அதிகமாக உள்ள ஒரு விவரணை எந்த விதத்திலும் மக்களிடம் அவர்களின் முக்கியத்துவம் பற்றி கொண்டு செல்ல உதவ போவதில்லை என நான் நினைக்கிறேன்.
ஜென்னி ஒரு முக்கிய பெண் கதாபாத்திர வடிவமைப்பாக இருக்கிறார். Communism பயின்ற அவர் மன நிலையையும் இந்த கதையில் உப கதைகளில் வரும் பல்வேறு பெண் கேரக்டர்களையும் ஒப்பு நோக்க ஒரு Marxism பயின்ற பெண் எவ்வளவு individuals tic ஆகவும் ஆணை சற்றே அச்சுறுத்தல் செய்பவராகவும் இருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. முகுந்தன் தொடக்கம் முதலே ஈர்ப்பு இருந்தாலும் அவளை நெருங்க தயங்கும் மன நிலையில் உள்ளான். இவை இக்கதையில் extraordinarily depicted என நான் நினைக்கிறேன்.
இந்த நாவல் என்னுடைய தனிப்பட்ட பார்வையில் முக்கியமான , சுவாரஸ்யமான ஒன்று தான். நான் சொன்ன குறைகள் எல்லாம் ஒரு இடது சாரி பார்வையில் சொன்ன விஷயங்கள்தான். எந்த ஒரு கலைக்கும் "நோக்கம்" முக்கியம் என்பது கூட ஒரு leftist view தான். இந்த நூலை எழுதிய நோக்கம் கலை மட்டுமே என்றால் மிகவும் நல்லது.
What's the takeaway from this book for Marxism inspired movements is that they have to realise that societies and individuals are to be given time to evolve on matters of culture and relationships and it is better to let the things change on its natural course. Any change effected forcibly will not last long.
________________ ____
Comments