Human kind A Hopeful history

Rutger பர்க்மேனின் மனிதகுலம், ஒரு நம்பிக்கையான வரலாறு - புத்தக விமர்சனம் இந்தப் புத்தகம், ஹான்ஸ் ரோஸ்லிங் எழுதிய 'Factfulness' புத்தகத்தை கருத்து ரீதியாக ஒத்திருக்கிறது. Factfulness புத்தகத்தில், மனிதகுலத்தின் கடந்த காலம் நிகழ் காலம் புள்ளி விவரம் மூலம் ஒப்பிடப்படுகிறது. Rutger படைப்பில் பாதகமான சூழ்நிலைகளிலும் கூட, மனிதன் எவ்வாறு கருணையுடனும் கண்ணியத்துடனும் இருந்திருக்கிறான் என்ற கருத்தியலில் இருந்து சொல்லப்படுகிறது. ஆசிரியர், தனது வாதத்திற்கு நிஜ வாழ்க்கை உதாரணங்களிலிருந்து போர் முனைகளை உள்ளடக்கிய ஆய்வுகள் வரை மேற்கோள் காட்டுகிறார். இந்தப் புத்தகம், Reader's Digest சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பைப் படிப்பது போல உள்ளது. உலகின் நிலை குறித்து எப்போதும் எதிர்மறை பார்வையை கொண்ட அனைவருக்கும் இந்தப் புத்தகத்தை நான் பரிந்துரைக்கிறேன். இந்தப் புத்தகத்தின் மையக்கரு, மனிதர்கள் இயல்பாகவே கருணையும் அன்பும் கொண்டவர்கள், பெரும்பாலும் நெருக்கடி காலங்களில் அவர்கள் பொதுவாக உள்ள நம்பிக்கைக்கு மாறாக கண்ணியமாகவும் நாகரீகமாகவும் நடந்துகொள...