Nexus review - tamil version
ஹராரியின் 'நெக்ஸஸ்' - எனது பார்வை யுவால் நோவா ஹராரி சமீபத்தில் எழுதிய 'நெக்ஸஸ்' புத்தகம் மனிதர்களின் தகவல்தொடர்பு வரலாற்றைப் பற்றியது. மிகப் புகழ் பெற்ற வரலாற்று எழுத்தாளரான இவர், மனிதகுலம் தந்தி முதல் தற்போதைய தகவல் புரட்சி சகாப்தம் வரை எப்படி வளர்ந்தது என்பதைப் பற்றி nexus எனும் இந்த நூலில் எழுதியுள்ளார். மனிதகுலத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம் பெரிய அளவிலான தகவல் வலையமைப்புகள்தான். மனிதர்கள் கற்பனையால் சக்திவாய்ந்த விஷயங்களை உருவாக்கினார்கள். இயந்திரங்கள் மட்டுமல்ல, மதங்களும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தின என்று யுவால் ஹராரி கூறுகிறார். அன்பையும் மகிழ்ச்சியையும் பரப்புவதற்குப் பதிலாக, மதங்கள் உலகை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன என்கிறார். யுவால் நோவா ஹராரி கம்யூனிசத்தை விரும்புபவர் இல்லை என்பது நமக்குத் தெரியும். தனது முந்தைய புத்தகங்களைப் போலவே, இதிலும் கம்யூனிசத்துக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை. பல இடங்களில் ஸ்டாலினை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார். "அதிக தகவல்கள் மனிதர்களுக்கு சிறந்த வாழ்க்கையைக் கொண்டு வந்தன" - மனிதர்கள் அதிக தகவல்களைப் பகிர்ந்து ...