A Letter to Writer Jeyamohan
பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இந்த கொரோனா காலத்தில் உங்கள் தளத்தில் சிறுகதை மழையில் எல்லோரையும் போல நானும் நனைந்து கொண்டே இந்த கடிதத்தை எழுதுகிறேன். இன்று வெளி வந்துள்ள 'கைமுக்கு' கதையை வாசித்து விட்டு உங்களுக்கு கடிதம் எழுதியே ஆக வேண்டும் என எழுதுகிறேன். ஏராளமான கதைகளை எழுதி கொண்டே இருக்கிறீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எப்படி சாத்தியம் ஆகிறது என்ற ஆச்சரியம் ஒரு புறம். அதிக திறமை உள்ளவர்கள் பற்றி சொல்லும் பொது சரஸ்வதி அவர்களிடம் குடி இருப்பதாக சொல்வார்கள். உங்களிடம் அவள் குடியிருப்பது மட்டும் அல்லாது அவள் அதி உச்ச நிலையிலும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. I think she not only resides in you but she is in an orgasmic state also. இந்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பான படைப்புகள் சாத்தியமாவது அதனால் தானோ என்னவோ. ( இப்படி சொல்வது கூட இந்த காலத்தில் ஏதும் பிரச்சனையை உருவாக்குமோ ?) உங்களின் அசாத்திய திறமையை பார்த்து பொறாமை படுபவர்கள் ...