A Letter to Writer Jeyamohan
பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம். இந்த கொரோனா காலத்தில் உங்கள் தளத்தில் சிறுகதை மழையில் எல்லோரையும் போல நானும் நனைந்து கொண்டே இந்த கடிதத்தை எழுதுகிறேன். இன்று வெளி வந்துள்ள 'கைமுக்கு' கதையை வாசித்து விட்டு உங்களுக்கு கடிதம் எழுதியே ஆக வேண்டும் என எழுதுகிறேன். ஏராளமான கதைகளை எழுதி கொண்டே இருக்கிறீர்கள்.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். எப்படி சாத்தியம் ஆகிறது என்ற ஆச்சரியம்
ஒரு புறம். அதிக திறமை உள்ளவர்கள் பற்றி சொல்லும் பொது சரஸ்வதி அவர்களிடம் குடி இருப்பதாக சொல்வார்கள். உங்களிடம் அவள்
குடியிருப்பது மட்டும் அல்லாது அவள் அதி உச்ச நிலையிலும் இருப்பதாக
எனக்கு தோன்றுகிறது. I think she not only resides in you but she is in an orgasmic state also.
இந்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்பான படைப்புகள் சாத்தியமாவது அதனால் தானோ என்னவோ. ( இப்படி சொல்வது கூட இந்த காலத்தில் ஏதும் பிரச்சனையை உருவாக்குமோ ?)
உங்களின் அசாத்திய திறமையை பார்த்து பொறாமை படுபவர்கள்
சிலர் சமூக வலை தளங்களில் பத்து லட்சம் காலடிகள் கதையில் வந்த
ஒரு வரியை வைத்து கொண்டு உங்களுக்கு எதிராக வசைகளை வாரிப் பொழிந்து கொண்டு இருந்ததை பார்த்த பொழுது எனக்கு தஸ்தாவெஸ்கி
ஒரு கட்டுரையில் இப்படி பட்டவர்களை பற்றி சொல்லும் பொழுது "இலக்கை
நோக்கி செல்பவன் வழியெங்கும் குரைக்கும் நாய்களுக்கு எல்லாம் வாயை
திறந்து பதில் கூறாமல் அவன் இலக்கிலேயே கவனமாக இருப்பான் ' என
சொன்னதாக சமீபத்தில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு உரையில் சொன்னது நினைவில் வந்தது. அவர் மேலும் " பஸ்கள் செல்லும் போது கூடவே துரத்தி கொண்டும் குரைத்துக் கொண்டும் நாய்கள் ஓடி வரும். ஆனால் என்றைக்கும் அந்த நாய்களுக்காக பஸ்கள் நின்றது கிடையாது. அதன் பாதையில் அது சென்று கொண்டு தான் இருக்கும். அதை போல தன குறிக்கோள் ஒன்றே கவனமாக இருப்பவர்கள் வழியில் வருகின்ற இது போன்ற சிறு சிறு விஷயங்களால் சஞ்சலம் அடைய மாட்டார்கள் என்றும் சொல்லுகிறார். By the way, அந்த கதையில் ஔசேப்பச்சன் சொல்வதில் தவறெதுவும் இல்லை என்பதே என் கருத்து. It is his opinion. Beauty lies in the mind of the beholder. Its plain ridiculous to say that even the characters of stories should speak politically correct. இன்னும் சொல்லப் போனால் மேற்கு கரையோரம் நண்பர்களுடன் பயணம் செல்லும் போதெல்லாம் நானும் கிட்டத்தட்ட இதே கருத்துக்களை
கூறி இருக்கிறேன்.
இப்படி ஒரு பக்கம் சமூக வலை தளத்தில் இந்த விஷயம் ஓடி கொண்டிருப்பது தெரிந்தும் மீண்டும் அதே போன்ற சச்சரவு உருவாக்கும்
potential கொண்ட உரையாடல் நிரம்பிய "கைமுக்கு" வெளியிட்டு உள்ளீர்கள். அதில் உள்ள பல்வேறு சமூகங்கள் குறித்த கேலி கிண்டல்களை வேறு எவரும் இவ்வளவு தைரியத்துடன் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே. கதையில் தானே என்றாலும்.அந்த துணிச்சலிற்கு எனது பாராட்டுக்கள். பல இடங்களில் சிரிப்பை என்னால் அடக்க முடிய வில்லை. வாய் விட்டே சிரித்து கொண்டு
இருந்தேன். நல்லவேளையாக அருகில் யாரும் இல்லை.
குற்றங்களை செய்து கொண்டிருக்கும் ஒருவன் அதை நியாயப்படுத்த
சொல்லுவதை பார்க்கும் போது சரிதானே என்று தோன்றும் வகையில் மகேஷ் தரப்பு சொல்ல பட்டு இருந்தது. குற்றவாளியின் பார்வையில் சொல்லும்
பொழுது தஸ்தாவஸ்கி அங்கே வந்தே தீர வேண்டும்.என படிக்கும் போதே நினைத்தேன். வருகிறார். மேலும் சமூகம் சுயநலத்துடன் அறமற்று சென்று கொண்டு இருப்பதையும், கிரிமினல்கள் மட்டும் அல்ல நமது சமூகத்தின் பல கிளைகளும் எல்லா வித தகிடுதத்தங்களையும் செல்வம் சேர்ப்பதற்கு நியாயப்படுத்துதலை கதை சொல்லி செல்கிறது. படித்து முடித்த பிறகு நமது சமூகத்தை/நாட்டை பற்றிய ஒரு அவ நம்பிக்கை ஏற்பட்டது உண்மை. கடைசியாக இனி இன்னும் இருபது ஆண்டுகளுக்கு புனித ஃப்யூரர் ஆட்சி தான் என்று வரும் போது அவநம்பிக்கையின் உச்சத்தையே அடைந்தேன் என்று சொல்ல வேண்டும். ஏன் அப்படி? கொஞ்சம் நல்ல விதமாக முடிக்க கூடாதா... புனித ஃப்யூரர் - சொல்லாட்சி அருமை. திரு பி எ கிருஷ்ணன் அவர்கள் தான் ஒரு குறிப்பிட்ட VIP நபரை பற்றி முக நூலில் இவ்வாறு சொல்வார். நீங்கள் அத்தோடு புனிதர் பட்டத்தையும் சேர்த்து விட்டீர்கள்.
சமீபத்தில் தான் குற்றமும் தண்டனையும் படித்தேன். "கைமுக்கு" அதன்
இக்காலத்திய ஆனால் வேறு ஒரு தளத்தில் சொல்லப் பட்ட சிறிய நாவல் போல இருந்தது. குற்றமும் தண்டனையும் முழு நீள ட்ராஜெடி என்றால் கைமுக்கு கொஞ்சம் சிரிப்பு தோரணம் கட்டப்பட்ட ட்ராஜெடி கதை.
சற்றே தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நன்றிகளுடன்
சுப்ரமணியம்.
Comments