டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு - தொகுதி 7 இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணங்கள் இஸ்லாமியரின் படையெடுப்பே இந்தியாவில் பௌத்தத்தின் வீழ்ச்சிக்கான காரணம் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இருக்க முடியாது என அம்பேதகர் குறிப்பிடுகிறார். புத் என்ற அரபு சொல்லுக்கு அர்த்தம் உருவச்சிலை. எனவே பௌத்த சமயம் என்பது உருவவழிபாட்டு சமயம் என்று எண்ணிய இஸ்லாமியர், உருவ சிலைகளை உடைக்க வேண்டும் என்ற அவர்களின் சமய நோக்கத்திற்கு ஏற்ப பௌத்த விஹாரங்கள் மற்றும் அதோடு கூட பௌத்த பிக்குகளையும் முஸ்லிம்கள் அழித்து ஒழித்து விட்டனர். இப்படி கிட்டத்தட்ட ஆசியா முழுவதிலும் (ஆப்கானிஸ்தான், பாக்த்தீரியா,பார்த்தியா காந்தாரம் சைனீஸ் துர்கிஸ்தான் )பௌத்த மதத்தை இஸ்லாம் அழித்து விட்டது. ( page 104 ) ஆனால் பிராமணியம் பௌத்தம் இரண்டையும் இஸ்லாம் தாக்கியது. ஒன்று மட்டும் ஏன் நிலைத்து நிற்கிறது (பிராமணியம்) மற்றொன்று அழிந்து விட்டது என்ற கேள்விக்கு பதில் சொல்லும் அம்பேதகர் பௌத்தத்தின் வீழ்...
Posts
Gandhi 150 - காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள்
- Get link
- X
- Other Apps
காந்தி, தாகூர் மற்றும் கோல்வால்கரின் தேசியம் குறித்த அணுகுமுறைகள் காந்தி மற்றும் தாகூர் இருவரும் பிறந்து 150 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் நமது தேசம் குறித்த அவர்களின் கருத்துக்கள் பல இன்றைக்கும் விவாதிக்க கூடியதாக இருக்கிறது. இந்திய தேசியமா இந்து தேசியமா என விவாதம் நடை பெற்று வரும் இன்றைய சூழலில் தேசப் பிதாவும் தேச நிர்மாணிப்பில் முக்கிய அறிவுப் பங்காற்றியவருமான குருதேவ் என காந்தி அன்பாக அழைத்த கவி ரவீ ந்திரநாத தாகூர் அவர்களுக்கும் இருந்த தேசியம் பற்றிய உரையாடல்கள் சில மிக முக்கியமானவையாகவும் இன்று நினைவு படுத்தக் கூடியதாகவும் உள்ளது . இந்தியா, பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய மூன்று நாடுகளின் தேசிய கீதங்களை எழுதிய கவி தாகூர் அவர்களின் தேசியம் குறித்த பார்வை மிக விசாலமான ஒன்று. கவிஞர்களுக்ககே உரிய கனிவு மற்றும் கன...
காந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி
- Get link
- X
- Other Apps
காந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி காந்தி,கார்ல் மார்க்ஸ் இருவரும் வேறுபட்ட துருவங்களாகத் தான் பார்க்கப் படுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம். மார்க்சிய அறிஞர்களும் காந்தீயர்களும் சந்திக்கக் கூடிய புள்ளி எதுவும் இருக்க முடியாது என்றே உறுதியாக சொல்பவர்கள் உண்டு. எனினும் இருவரது கருத்துகளும் ஒத்துப் போகின்ற தளங்கள் உள்ளன என்று தத்துவ அறிஞரும் கொலம்பியா பல்கலைகழகத்தின் பேராசிரியருமான அகீல் பில் கிராமி குறிப்பிடுகிறார். மேலோட்டமாக பார்க்கும் போது ஒற்றுமைகள் ஏதும் இல்லை என்றாலும் சில விளக்கங்கள் (interpretations) வழியாக ஒன்றாக உள்ள அம்சங்களை அகீல் பில் கிராமி நிறுவ முயற்சிக்கிறார். இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள இடது சாரி அறிஞர்களுக்கு காந்த...
காந்தி 150 - பகத் சிங்கும் காந்தியும்
- Get link
- X
- Other Apps
பகத் சிங்கும் காந்தியும் நமது சுதந்திர போராட்ட வீரர்களில் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் கொண்டாடப்படுகிற மற்றும் அனைவராலும் அன்புடனும் பெருமையுடனும் நினைவு கூறத் தக்க ஒருவர் என்றால் அது பகத் சிங் மட்டுமே. பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் வீர தீரத்திற்காகவும் தியாகத்திற்காகவும் அவர் இரு தேசங்களிலும் போற்றப் படுகிறார்.அவருக்கு முன்னும் பின்னும் சுதந்திர போரில் நிறைய பேர் உயிர் தியாகம் செய்து இருந்தாலும் பகத்சிங் மட்டும் இன்னும் தனியான ஓர் ஆளுமையாக இரு நாட்டு மக்கள் மனதில் இருக்கிறார் என்பதை நாம் பார்க்க முடிகிறது. காந்தி நேரு போன்றோர் பாகிஸ்தானில் போற்றப்படுவது இல்லை அவ்வாறே ஜின்னா அவர்கள் இந்தியாவில் கொண்டாடப்படுவது இல்லை என அனைவரும் அறிவோம். மாறாக பகத் சிங் இந்தியா மட்டும் இன்றி பாகிஸ்தானிலும் ஒரு விடுதலை நாயகனாக இன்றளவிலும் கொண்டாடப்படுகிறார் .பாகிஸ்தானை அடிப்படை வாத அரசியல் முழுமையாக ஆட்கொண்டு விட்ட இந்த நேரத்திலும் பகத...