அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து
அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து
மதம் எனும் கருதுகோளும் பௌத்தமும்
மதங்கள் என சொல்லப்படுபவைகளுக்கு சில இலக்கணங்கள் இருக்கும்.
அவைகள் உலகம் தோன்றிய விதம், தோற்றுவித்தவர் (கடவுள்) பற்றிய விஷயங்கள், மனிதன் மற்றும் பிற உயிரினங்கள் தோன்றிய விதம், பிறப்பு இறப்பு பற்றிய ரகசியங்கள், சொர்க்கம், நரகம் ஆகியவற்றை பற்றி நிச்சயம் விவாதிப்பவையாகவும் கருத்து கொண்டவையாகவும் இருக்கும்.
புத்தர் தனது எந்த வொரு விவாதத்திலும் அவைகளை முன் எடுக்காமல் இவைகளை பற்றிய நிலைப்பாடு எதுவும் எடுக்காமல் இருக்கிறார் என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தன்னை கடவுளை உணர்ந்தவன் என்றோ அல்லது தூதன் என்றோ குறிப்பிடாமல் மனித வாழ்க்கைக்கு தேவையானவற்றை பற்றியே நான் பேசுவேன் என 2400 வருடங்கள் முன்பே கூறி புரட்சி செய்கிறார், கடவுள் சொர்க்கம், நரகம் என்பது எல்லாம் மனிதனின் தினசரி லௌகீக வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவப் போவது இல்லை என கூறி ஒதுக்கித் தள்ளுகிறார்.
புத்த ஞானம்
சாங்கியம், சமாதி மார்க்கம் முதலியன கற்று கடும் விரதங்களை எல்லாம் மேற்கொண்ட புத்தர் அவையனைத்தையும் விடுத்து புதிய தம்மம் ஒன்றை
இறுதியாக நான்கு வார விரதத்திற்கு பிறகு கண்டு கொள்கிறார். உலகில் பிரச்சனைகள் இரண்டென காண்கிறார் . இவ்வுலகில் துக்கம் உண்டு என்பதும்
அவற்றிற்கான தீர்வை கண்டறிந்து மனிதர்களை மகிழ்ச்சியுற வைத்தல் ஆகியவையே அவைகள்.
புத்தரின் தத்துவ கூறுகள் சில கபில முனியின் சாங்கியத்தை ஒத்து இருந்தது.கபிலரின் சாங்கியத்தில் இருந்து முக்கிய அம்சங்களான உண்மை நிரூபணம் செய்யப்படல் வேண்டும் என்பதையும் பகுத்தறிவையும் கடவுள் பற்றிய கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதையும் அவர் ஏற்கிறார். பிறவற்றை பொருத்தமற்றதாக ஒதுக்குகிறார்.
சதுர் வர்ண பிரிவையும் வேதங்களையும் மறுக்கும் புத்தர் எந்த ஒரு கருத்தும் இறுதியானதாகவோ எல்லா காலத்திற்கும் ஏற்றதாகவோ இருக்க முடியாது எனவும் அது மறுபரிசீலனைக்கு உட்பட்டதே எனவும் குறைவே இல்லாதது என எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்.
பிறர் நன்மைக்காக செய்யும் யாகங்களை ஏற்கும் புத்தர் சுய நலனுக்காக
யாகங்கள் செய்வதை ஏற்கவில்லை. யாகங்களில் மிருக பலியிடுவதையும்
அவர் கடுமையாக எதிர்த்தார். பிராமணீய கருத்துக்களை உண்மை வாழ் முறைக்கு விரோதமானது என புத்தர் முற்றாக ஒதுக்கி தள்ளுகிறார்.
பிரம்மம், உபநிடதங்கள்
வேத உபநிடதங்களின் மைய கருதுகோளான பிரம்மம் எனும்
கருத்திற்கு எந்த ஆதாரத்தையும் காணாத புத்தர் அதனை மறுக்கிறார். பிரம்மம் பற்றிய கேள்விக்கு பிரஹதாரண உபநிடதத்தில் யக்ஞவல்கியர் எனும் ரிஷி இதற்கு விடையாக "நேதி நேதி " நான் அறியேன் என்று தான் கூற முடிகிறது என்று உபநிடத பிரம்ம கோட்பாட்டையும் வெறும் கற்பனையே என புத்தர் புறம் தள்ளி விடுகிறார். புத்தர் காலத்தில் வேத கோட்பாட்டிற்கு எதிர்ப்பாக அறுபத்தி இரண்டு தத்துவ பிரிவுகள் இருந்ததாக அம்பேதகர் குறிப்பிடுகிறார்.
புத்தர் ஏற்று கொண்ட, மறுத்த கோட்பாடுகள்
புத்தர் அனைத்திற்கும் நடு நாயகமாக மனம் என நிர்ணயிக்கிறார்.
மனம் பொருள்களுக்கும் முந்தையது, அது ஆள்கிறது படைக்கிறது. எனவே அதை அறிந்தால் அனைத்தும் அறியப்படுகிறது எனவும் ஆகவே முதலில் மனம் என்பது பண்பட வேண்டும் என்கிறார். சமயம் என்பதே
மனத்தே உள்ள மாசுக்களை அகற்றலே. உண்மை சமயம் என்பது மத
நூல்களில் இல்லை அவற்றின் கோட்பாடுகளை கடைபிடிப்பதிலே
தான் உள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.
நான் யார்? எங்கே செல்வேன் எங்கு இருந்தேன் என்ற விசாரங்களில்
ஈடுபடுவதை புத்தர் அறவே ஒதுக்க சொல்கிறார். மனிதனை கடவுள் என்ற ஒருவன் படைத்தான் என்பதை மறுத்தார். ஆன்மா பற்றிய பல வதந்திகளை
அவர் நிராகரிப்பதோடு அதனை உடலோடு புலன்களோடு உணர்வோடு தொடர்பு படுத்தலை தவிர்த்தார்.
அம்பேத்கர் கருத்து படி புத்தர் காரண காரிய விதியை சில துணை கருத்துக்களோடு ஒப்புக் கொள்கிறார். ஆனால் முற்பிறவி பலன் தான்
இப்போதய நடப்புகளுக்கு காரணமாக உள்ளது என்பதை நிராகரித்து கர்மா கருத்தை புதிய விஞ்ஞான பார்வையில் கொடுக்கிறார் . மோட்சம் எனும் கோட்பாடு நிர்வாணம் அல்லது நிப்பான கோட்பாட்டால் மாற்றி அமைக்கப் பட்டது. பழைய மொந்தையில் புதிய மது பொழிந்தார் புத்தர் என்கிறார் அம்பேதகர்.
போதனைகள்
விருப்பங்கள் வாசனைகள் அனைத்தையும் அழிக்க வேண்டும். அவை
மறுபிறவிக்கு வித்திடுகின்றன. மஜ்ஜிம பதிபாதா எனும் மத்யம பாதையில்
அதாவது சுக போகமுமின்றியும் வருத்தி கொள்ளாமலும் உள்ள நடுவு நிலை பாதையில் புத்தர் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். " எல்லா இன்ப நாட்டங்களும் கீழானவையாக இருந்தாலும் வாழ்வின் தேவைகளை நிறைவேற்றி கொள்வது தீயது அன்று. உடலை நல்ல நிலையில் வைப்பது கடமையாகும் இல்லை எனில் மனதை தெளிவாய் வலிமையை வைப்பது முடியாது" என்கிறார் புத்தர் பெருமான்.
அவருடைய தம்மம் (சமயம்) கடவுள் மற்றும் ஆன்மாவோடு தொடர்பு அற்றதாகவும் ,இறப்பிற்கு பிந்தைய வாழ்வோடு இசைவு இல்லாததாகவும், சடங்கு சம்பிரதாயங்கள் இல்லாததாகவும் இருக்கிறது.
தம்மத்தில் மையம் ஆக மனிதனும் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவே உள்ளது. அதன் ஒரே குறிக்கோள் மனிதனை துக்கத்தில் இருந்து விடுவிப்பதே.
துன்புறுத்தல் கூடாது. கொல்ல கூடாது. பொய் சொல்வது திருடுவது பிறர் பொருளை தனதாக்கி கொள்வது காம வெறி போதை ஆகியவையும்
தம்மத்திற்கு எதிரானது என்கிறார் புத்தர்.
மனிதரிடத்து கருணை அன்பை தாண்டி மைத்ரி என்ற ஒன்று அவசியம் எனும் புத்தர் அது மனிதரிடத்து மட்டும் அல்லாது எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுவதேயாகும் என்று சொல்கிறார்.
மனித துன்ப நீக்கலையே தன் குறிக்கோளாக புத்தர் கூறுகிறார். இதை பற்றி அம்பேதகர், உலக வரலாற்றில் எப்போதும் எந்த ஒரு மத நிறுவுனரும்
மக்களின் துன்பத்தை நீக்குவதை போதித்தது இல்லை என்று சொல்கிறார்.
மதத்தின் அடிப்படை நோக்கமாக மக்கள் துன்பத்தை உணர்வதும் அதை நீக்குவதும் என சொல்வது உலகில் புத்த மதம் மட்டுமே.
சன்யாசமும் வாழ்வியலும் பௌத்தமும்
ஓய்வான வாழ்க்கையை விரும்பி \பிக்குவாக செல்வது என்பது பயனற்றது என புத்தர் கூறுகிறார். மனிதர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும் அச்செயலில் முழு மனதோடு தன்னை செலுத்தி கொண்டு சிறப்பாக பணியை செய்ய புத்தர் வலியுறுத்துகிறார். புத்தர் , ஆசையை அறவே அறுத்த சன்யாசத்தை புத்தம் வலியுறுத்துகிறது என்ற பொது புரிதலுக்கு மாறாக இவ்வுலக வாழ்வை சிறப்பாக நடத்தி செல்லவே புத்தர் அறிவுறுத்துகிறார் என்பதை காண்கிறோம்.
ஏனைய மதங்களும் பௌத்தமும்
கிருத்துவத்தில் இயேசு கிறிஸ்து தன்னை இறை தூதனாகவும் இஸ்லாமின் தீர்க்கதரிசி முஹம்மத் நபி தாம் இறைவனால் அனுப்பப் பட்ட தூதர் என்றும் உரிமை கொண்டாடுகின்றனர். இதனை ஏற்காதவர்களுக்கு மோட்சம் என்பது அந்த மதங்களில் சாத்தியம் இல்லை. இவை போன்ற நிபந்தனைகள் எதுவும் புத்தர் தம்மை பின் தொடர்பவர்களுக்கு விதிக்க வில்லை. தாம் ஒரு சாமானியர் என்றே அவர் கூறி கொண்டார். முக்திக்கும் அவர் நிபந்தனை எதுவும் சொல்லவில்லை. தம்மம் மட்டுமே பௌத்தத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. ஏனைய மதங்களை போல் தனி நபர்கள் அல்ல.
தமக்கு யாரையும் வாரிசாக நியமிக்காத புத்தர் தம்மத்துக்கு வாரிசு
தம்மம் தான் என்கிறார். எந்த ஒரு (மத) வெளிபாட்டையும் (revelation ) குறித்து
பௌத்தம் பேசவில்லை. தன்னை பின்பற்றுபவருக்கு மோட்சம் வழங்குவதாக எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகையில், புத்தர் தாம் வழி காட்டுபவர் மட்டுமே
என்று சொல்கிறார். விடுதலையை அவரவர் முயன்று பெற்று கொள்ள அவர் வலியுறுத்துகிறார்.
மற்ற மதங்களை போல் அல்லாமல் பௌத்தம் ஒரு சமூக தத்துவம்
என அம்பேத்கர் கூறுகிறார்.
தம்மத்தின் பொருள்
வாழ்வில் உணர்வால் உரையால் உள்ளத்தால் தூய்மையை கடைபிடிப்பதும் அதே போல முழு நிறைவு அடைவதும் தம்மம்.
நிப்பானத்தில் வாழ்வதே தம்மம். புத்தர் கூறும் நிப்பானம் பிறர் சொல்லும் ஆன்ம முக்தியில் இருந்து வேறுபட்டது. ஆன்மாவும் உடலும் வேறு
என்பதை ஏற்காத புத்தர், பற்றற்ற நிலையை அடைவதே நிப்பான நிலை
என்கிறார். பற்றற்ற நிலை முழு சுதந்திரத்தை மனிதருக்கு வழங்குவதாக
அவர் கூறுகிறார். நன்னெறி வாழ்வு என்பது நிப்பானத்தின் மறு பெயர்.
நிப்பானம் என்றால் புலன் உணர்வுகள் மீது போதுமான கட்டுப்பாடு செலுத்தி
நன்னெறியில் நடை போட தூண்டுதலாகும். இது முற்றான அழிவிற்கும் பரிநிப்பாணத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை என்கிறார் அம்பேத்கார்.
வறுமையும் புத்தமும்
வறுமையில் உள்ளவர்கள் பாக்கியசாலிகள் என புத்தர் கூறாமல்
எல்லோருக்கும் வளமான வாழ்க்கையே வரவேற்கத்தக்கதென்றும்
ஊக்க மிக்க செயல்பாடே வேண்டப்படுவதாகவும் அவர் போதிக்கிறார்.
திருப்தி உயர்ந்த செல்வம் என்பதை எல்லையற்ற பேராசைக்கு ஒருவன் அடிமையாகி விட கூடாது என்பதற்காக சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
நிலையாமை கோட்பாடும் சூனிய வாதமும்
எல்லா கூட்டு பொருள்களும் நிலையற்றவை என்று பௌத்தம்
கூறுவது பிற்காலத்தில் சூன்ய வாத தத்துவத்திற்கு வழி வகுத்தது.
உயிர் வாழ்வது எல்லாம் நான்கு மூல பொருள்களின் கூட்டே. இந்த கூட்டு சிதையும் போது மரணம் உண்டாகிறது.
செயல் விளைவு என்கிற கர்ம தத்துவம்
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு என்பதும் எல்லா விளைவுகளுக்கு பின்னும் ஒரு செயல் இருந்தாக வேண்டும் என்பது
செயல் விளைவு தத்துவம். பௌத்தம் இந்த கர்ம தத்துவத்தை பற்றி பேசுகிறது. இதை பிராமணீய கர்மாவில் இருந்து வேறுபடுத்தி சொல்கிறார்
அம்பேத்கார். இந்து சமய கர்ம விதி, ஆன்ம அடிப்படையும் பிறப்பின் தொடர்ச்சியையும் ஆதாரமாக கொண்டது. புத்தரின் கர்மா தற்கால வாழ்விற்கு மட்டுமே பொருத்தம் உடையதாகும். பிறவி தொடர்ச்சி என்பதை அது வாரிசின் தொடர்ச்சியாக விஞ்ஞான முறைப்படி சொல்கிறது.
கடவுள் கோட்பாடும் பௌத்தமும்
பௌதீக உலகின் ஒழுங்கு நியதிகளுக்கு காரணம் கடவுள் என சொல்வதை சார்பான வாதம் என பௌத்தம் கருதுகிறது. அது திருப்தி
அளிக்க கூடியதாக இல்லை என்கிறார் புத்தர். ஆகவே உலக நியதிக்கு
(ஒழுங்கிற்கு ) ஒரு பதிலாக பௌத்தம் கம்ம நியமம் என்று குறிப்பிடுகிறது. பிரபஞ்சத்தின் ஒழுக்க நியதியாக இயக்கமும் அதை நிர்வகிப்பதாக கம்ம விதிகளும் இருப்பதாக புத்தர் வகுக்கிறார். இதனால் புத்தரின் சமயத்தில் கடவுளின் இடத்தை ஒழுக்கம் பெறுகிறது.
அறியப்படாதவை -- பிரபஞ்ச தோற்றம்
பிரபஞ்ச தோற்றம் பற்றிய கேள்விக்கு புத்த பிரான், அதனை அறிந்தவர் எவரும் இலர். தானும் அறிந்திருக்க வில்லை எனவும் எல்லாம் அறிந்தவர் என்று எவரும் இருக்க முடியாது. அறியப்படாதது எக்காலத்தும் இருக்கவே செய்கிறது என்றும் உரைக்கிறார். இக்காரணத்தினால் இது போன்ற அறிய முடியாத விஷயங்களை பற்றி புத்தர் கருத்து எதுவும் கூறவில்லை.
உலகம் படைப்பட்டது என புத்தர் நம்பவில்லை. பரிணாம வளர்ச்சி
அடைந்தது என கருதினார் என்று அம்பெத்கர் கூறுகிறார்.
அனைத்தும் பரிசீலனைக்கு
வேதங்கள் புனிதமானவை என்பதை மறுக்கும் புத்தர், தமது தம்ம
நூல்களும் முடிவானவை அல்ல என்றும் மறுபரிசீலனைக்கு உட்பட்டதே
என்றும் தம்ம நூல்களில் தவறே இருக்காது என நம்புவதும் தம்மம் அல்ல என்கிறார்.
மதங்களின் நோக்கம்
புவி, நீதியின் ராஜ்யமாக இருக்க வேண்டும் எனவும் எது சரியானது எது தவறானது என்பதையும் வழி காட்டுவதாக மதங்கள் போதிக்க வேண்டும்
எனவும் புத்தர் வலியுறுத்துகிறார். ஒவ்வொருவரும் தம் துன்பத்தை போக்கி
கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே அவரது சமய சாரம் ஆகும்.
சமத்துவமின்மை
சமத்துவமின்மை பிராமணீயத்தின் அதிகாரபூர்வ கோட்பாடு என
கூறி புத்தர் அதனை மிக கடுமையாக எதிர்க்கிறார். அவர் சாதியின் பரம
வைரியாகவும் சமத்துவத்தை ஆதரிப்பவராகவும் இருந்தார்.மாந்தர்கள் அனைவரும் சரி நிகரானவர்கள் என்று பௌத்தம் கூறுகிறது.
மதம்
மதம் என்பதற்கு விளக்கம் ஒவ்வொரு கால கட்டத்திலும் வேறு வேறாக இருந்து வந்துள்ளது என்று அம்பேத்கார் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர்கள் குறிப்பிடும் மதம் என்ற கருதுகோளில் இருந்து தம்மம் என்று புத்தர் கூறுவது வேறு என கூறும் அவர், தம்மம் என்பது சமுதாயம் சம்பந்தப்பட்டது. மனிதருக்கு இடையே உள்ள உறவை விளக்குவது என்கிறார். மதம் பிரபஞ்ச பொருட்களின் தோற்றத்தை வெளிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உள்ளது. தம்மத்திற்கு அவை முக்கியம் இல்லை. பிரபஞ்ச தோற்ற வரலாறால் மனிதருக்கு பயன் இல்லை என தம்மம் கருதுகிறது. தம்மத்திற்கு துன்ப நீக்கல் பிரதான குறிக்கோள் ஆகும். இவ்வகையில் அடிப்படை கோட்பாட்டிலேயே மதமும் தம்மமும் வேறுபடுவதாக அம்பேத்கார் விளக்குகிறார். மதம் ஒழுக்கத்திற்கு முக்கிய இடம் அளிப்பது இல்லை எனவும் தம்மம் அதனையே முதன்மையாக கருதுவதாகவும் அவர் கூறுகிறார்.
மறுபிறப்பு
ஆன்மாவின் தனித்துவத்தை பற்றிய நம்பிகையை புத்தர் கொண்டிருக்க வில்லை. ஆன்மாவை பொறுத்தவரையில் அவர் அழிவுநிலை வாதி. பருப் பொருள் பொறுத்தவரையில் அவர் அழிவு வாதி அல்ல. ஆன்மா அழிவற்றது என்ற கருத்தை புத்தர் மறுக்கும் அதே நேரத்தில் பருப்பொருளை இயக்கும் சக்திக்கு அழிவு இல்லையாதலால் பருப்பொருள் மீண்டும் கூட்டுப் பொருளுடன் கலந்து மேலும் ஒரு பிறப்பு எடுக்கிறது என்கிறார் அவர்.
இந்த வகையில் புத்தர் மறுபிறப்பை ஏற்கிறார் எனலாம்.
அஹிம்சையும் பௌத்தமும்
அகிம்சையை பௌத்தம் வலியுறுத்துகிறது. மனிதர்களிடத்து மட்டும் இல்லாது அனைத்து உயிர்களிடத்தும் கருணை செலுத்த வேண்டும் என்றும்
அதனை மைத்ரி எனவும் புத்தர் குறிப்பிடுகிறார். உணவை பொறுத்த வரை புத்தம் உயிர்கொலையை நிராகரித்தாலும் அசைவ உணவு உண்பதை ஏற்கிறது என அம்பேத்கார் கூறுகிறார். புத்த பிட்சுக்கள் கூட அசைவ உணவை ஏற்கின்றனர். இந்த வாதம் மஹாயான பௌத்தத்திற்கு ஏற்புடையது அல்ல.
மரணம்
மரணம் பற்றியோ மரணத்திற்கு பின் என்ன என்பதை பற்றியோ புத்தர்
எந்த கருத்தும் வெளிப்படுத்தவில்லை. அவைகள் மனித வாழ்விற்கு எவ்வகையிலும் பயன் தராது. அது நிறை வாழ்விற்கோ அல்லது
நிப்பானத்திற்க்கோ உதவாது என்பதால் தான் புத்தரால் வெளிப்படுத்த
படவில்லை.
பிரார்த்தனை
கடவுள் அல்லது பிற தேவதைகளுக்கான பிரார்த்தனைகள் வழிபாடுகள் எல்லாம் பயனற்றவை என புத்தர் கருதுகிறார்.
உணவும் தூய்மையும்
நீங்கள் உண்ணும் உணவு உங்களை தூய்மையாக்காது எனும் புத்தர் இறைச்சி உணவை பற்றி ஒரு ப்ராமணரிடம் உரையாடும் போது
தாவர உணவு மட்டுமே உண்டு, குடுமி வைத்து கொண்டு, தன்னை வருத்தி கொண்டு, வேள்வி செய்வதை காட்டிலும் புலன்களை அடக்கி, அவரவர் சக்திகளை ஆண்டு, உண்மையை கைக்கொண்டு, இரக்க குணத்தோடு தீமைகளை வென்றவன் தான் களங்கம் இல்லாதவன் என்கிறார். எனவே உண்ணும் உணவை விட ஒரு மனிதனின் செய்யும் நற்செயல்களே இன்றியமையாதது என புத்தர் கருதுகிறார்.
முடிவாக
ரிக்வேத சுலோகங்களில் மனித தேடல் அவனிடம் இருந்து புறவயமாகி
கடவுள்களை நோக்கி செல்வதை காண்கிறோம். பௌத்தம் அந்த தேடலை
உள்நோக்கி வழி நடத்தி அவனுக்குள் உள்ள ஆற்றலை வெளிக்கொணர்கிறது.
வேதங்களில் பிரார்த்தனைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் போற்றுதல்களே இருக்கிறது. பௌத்தத்தில் நாம் மனதை நன்னெறியில் செலுத்த பயிற்சி முறைமைகள் உள்ளன
குருட்டு விசுவாசம் என்பதை பௌத்தம் ஏற்கவில்லை. அது நவீன விஞ்ஞானத்தின் மாறுபட்டு கோட்பாட்டையும் ஆன்மா இல்லை என்பதையும்
கூறி ஒரு முழுமையான அறிவியலாக நவீன காலத்திற்கு ஏற்றதாக விளங்குகிறது என்று சொல்லி நூலை அம்பேத்கார் முடிக்கிறார்.
===============================================
சமீபத்தில் படித்த சிறப்பான ஒரு நூல் அம்பேதகரின் "பௌத்தரும் அவரது தம்மமும்".( அம்பேத்கர் நூல் தொகுப்பு 22. .) ஒரு புதிய நடையில் எழுத பட்டு இருந்தாலும் அது ரசிக்கத் தக்கதாக இருந்தது. பௌத்தத்தை பற்றிய ஒரு மேம்போக்கான புரிதலோடு தொடங்குபவர்களுக்கு நூல் ஏராளமான விவரங்களை தருகிறது. மேலும் புத்தரின் வாழ்வு பற்றியும் தத்துவம் குறித்தும் முழுமையான ஒரு விவரணையை தருகிறது. தத்துவ நெடி குறைவாகவும் எளிய வாசிப்புக்கு உகந்ததாகவும் நூல் உள்ளது.
பொது புரிதல்களும் புதிய விஷயங்களும் -
பரிவ்ராஜம் ஏற்கும் சூழல்
புத்தரது இளமை காலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவர் பிணி மூப்பு சாக்காட்டை கடந்து பரிநிர்வாணம் எப்படி அடைவது என அறிய இளம் மனைவியையும் பச்சிளம் பாலகனாக இருந்த அவர்களது குழந்தையையும் விட்டு விட்டு இரவோடு இரவாக காட்டுக்கு சென்று விட்டார் என்பதே. உண்மையில் என்ன தான் நடந்தது? ஏன் புத்தர் தனது 29 வது வயதில் பரிவ்ராஜம் (சன்யாசம்) மேற்கொண்டார் என்கிற கேள்விகளுக்கான விடை இந்த புத்தகத்தில் தெளிவாக அளிக்க படுகிறது. அம்பேதகர் புத்தரின் 29 வது வயது வரை சாவு, நோய் முதுமை பற்றி தெரியாமல் திடுமென ஒரு நாள் அவைகளை கண்டு விட்டு பயந்து போய் விடை தேடி காட்டுக்கு சென்று விடுகிறார் என்பது எவ்விதத்திலும் நம்பும் படியாக இல்லை எனவும் அவை சுத்த கட்டு கதைகள் மட்டுமே. அப்படி எதுவும் நடந்ததாக பதிவுகள் எதுவும் இல்லை என்கிறார் அவர் .
அடுத்து அவர் எந்த சூழலில் காட்டுக்கு செல்ல நேர்ந்தது என விளக்குகிறார். அன்றைய சாக்கிய தேசத்து மன்னரின் புதல்வரான
சித்தார்த்த கௌதமர் சாக்கிய சங்கத்தின் உறுப்பினராக இருக்கும் பொழுது
பக்கத்து கோலிய நாட்டினரோடு நீர் பகிர்வதில் பூசல் ஏற்பட அதற்கு
தீர்வாக சங்கத்தில் போர் என முடிவு செய்யப்படுகிறது. சாத்விக மனம் கொண்ட புத்தர் பேச்சின் மூலம் தீர்க்கலாம் என மாற்று கருத்து சொல்ல அக் கருத்து சங்கத்தில் பெருவாரியான உறுப்பினர்களால் தோற்கடிக்க படிகிறது.
புத்தரோ அக்கருத்து சரியானது அல்ல என ஏற்க மறுக்கிறார். அவர் மீது
சங்கத்தின் முடிவை மீறியதாக குற்றம் சாட்ட பட்டு அவர் குடும்பம் சமூக பகிஷ்காரம் செய்யப்படலாம் என்ற சூழலில் புத்தர் அதற்கு பதிலாக தாமே
விரும்பி பரிவ்ராஜம் மேற்கொள்கிறேன் என கூறி பிரச்சனையை முடிக்கிறார்
அதை சங்கமும் ஏற்கிறது.
அவர் மனைவி மற்றும் தாய் தந்தையர், சாக்கிய தேசத்து குடிமக்கள் அனைவர்க்கும் தெரிந்தே அவர் நாட்டை விட்டே வெளியேறி செல்கிறார் எனவும் உண்மையில் அவர் மனைவிக்கு அவரது இந்த முடிவில் முழு சம்மதமே எனவும் அம்பேத்கர் சொல்கிறார். ஆனால் அவரது வளர்ப்பு தாயும் தந்தையும் தேச மக்களும் மிகவும் துயர் கொள்கின்றனர். அவர் சன்யாசம் சென்ற சில நாட்களிலேயே சாக்கிய கோலிய தேச சிக்கல்கள் புத்தர் விருப்பப் படியே பேச்சு வார்த்தை மூலம் தீர்ந்து விட அவர் நாடு கடந்து இருக்க எந்த ஒரு காரணமும் இல்லாவிடினும் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருந்து
சன்யாசியாகவே 'இறுதி'உண்மையை தேட தொடங்குகிறார். புத்தரின் உண்மைக்கான தேடல் இப்படி தொடங்குகின்றது.

.
Comments