காந்தி 150 ..... ...
காந்தி 150 .... காந்தி இன்றும் போற்றப் பட வேண்டுமா... விமர்சனங்களும் விளக்கங்களும் ... காந்தி அவர்களின் 150 வது பிறந்த தினம் கொண்டாடும் இவ்வேளையில் அவரைப் பற்றிய எதிர் மறை கருத்துக்களுக்கான காந்தி தரப்பு விளக்கங்களை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். கோட்ஸே தரப்பு தனது எதிர் வினைகளை பொது வெளியில் மிக அழுத்தமாகவும் வலிமையாகவும் எடுத்து வைத்துக் கொண்டு இருக்கும் இன்றைய காலகட்டத்தில் அவைகள் கட்டாயமாகத் தேவைப்படுகிறது. எழுபது ஆண்டுகள் பின்னரும் தொடரும் எதிர் மறை விமர்சனங்கள் காந்தி இறந்து 70 ஆண்டுகள் கடந்தும் கூட ஏன் மிக கடுமையாக விமர்சிக்கப் பட வேண்டும் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. நமது சுதந்திரத்திற்கு போராடிய பல தலைவர்கள் இருக்க அவர்கள் எல்லோரையும் விட அதிக எதிர்மறை விமர்சனத்திற்கு ஏன் காந்தி ஆளாக்கப்படுகிறார். அந்த விமர்சனங்கள் எல்லாம் நியாயமானது தானா என்றும் பார்க்க வேண்டிய நேரம் இது.காந்தி மட்டும் இன்றி எந்த ஒரு வரலாற்று கதா பாத்திரத்தையும் சரியான ஒரு கோணத்தில் விமர்சனத்திற்கு ஆளாக்...