அன்னா கரீனினா - லியோ தல்ஸ்தோயின் காலத்தை வென்ற காவியம்
அன்னா கரீனினா - லியோ தல்ஸ்தோயின் காலத்தை வென்ற காவியம்
அன்னா கரீனினா. உலகின் தலை சிறந்த நாவல்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது. இன்று வரை எழுதப்படும் புதினங்களில் இதன் பாதிப்பு இல்லாமல் இருக்காது என சொல்லும் தல்ஸ்தோய் ரசிகர்கள் உள்ளனர். முக்கோண காதல் கதையின் முன்னோடி. இந்த நாவல் தழுவி நிறைய திரைப்படங்களும் கதைகளும் பல மொழி களில் எழுதப்பட்டு உள்ளது. ஜெயகாந்தனின் "பாரிசுக்கு போ" வில் இந்த நாவல் பற்றி விவாதிக்கப் பட்டு இருக்கும். அதன் கதாபாத்திரம் இந்த நாவலை ஒட்டி வாழ்க்கையில் முடிவு எடுப்பதாக இறுதிப் பகுதிகளை ஜெயகாந்தன் அமைத்து இருப்பார். தல்ஸ்தொய் படிக்க தொடங்க இதை விட அவரது "Resurrection" எளிமையான ஒன்று. 'அன்னா' அளவிற்கு புகழ் பெறாத ஆனால் அந்த அளவிற்கு கொண்டாடப் பட வேண்டியது இந்த Resurrection- ம் என்றே கூறலாம். அன்னா கரீனினா பாதிப்பில் தான் தல்ஸ்தோய் அவர்கள் தனது இறுதி நாட்களில் ரயில் நிலையத்தில் காலம் கழித்தார் என்று சொல்வார்கள். எனது நண்பர் ரயில்வே நிலையம் செல்லும் பொழுது எல்லாம் "அன்னா கரீனினா" புதினம் நினைவில் வரும் என சொல்வார்.
இது ஒரு மெகா நாவல். எண்ணூறு பக்கங்களுக்கு மேல் கொண்டது. ஒரு ப்ராஜெக்ட் மாதிரி எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும். படிக்க தொடங்கினால் அந்தக் கால ரஷ்யாவில் வாழும் உணர்வு வரும ரஷ்யாவின் சாதாரண மக்களில் இருந்து அரச குடும்பங்கள் வரை அவர்கள் வாழ்வு சித்தரிக்கப் பட்டு இருக்கும். பின்னாளில் ரஷ்யாவில் வர இருந்த விவசாய சீர்திருத்தங்கள் பற்றியும் இந்த நாவலில் மிக விரிவாக விவாதிக்கப் பட்டு உள்ளது. ரஷ்யாவில் 1800 களில் ஒரு குடிமகன் போலவே படிப்பவர்கள் உணரும் வண்ணம் நாவலை ஆசிரியர் கொண்டு செல்வார். புதினப் பிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்.
Comments