தம்மம் தந்தவன் - விலாஸ் சாரங், தமிழில் காளி பிரசாத்


 

  காளிபிரசாத் அவர்கள் மொழிபெயர்ப்பில் 
வந்த விலாஸ் சாராங்கின் "தம்மம் தந்தவன்" படித்தேன். அது ஒரு புத்தரின் புனைவாக்கப் பட்ட வரலாற்று நூல் என்றாலும்  அம்பேத்கரின் தம்ம பதத்துடன் முற்றிலும் முரண்படும் இடங்களை நான் கண்டேன். 2500 வருடத்திற்கு முன் வாழ்ந்த ஒருவரின் வாழ்வு குறித்து வெவ்வேறு விதமான கருத்துக்கள் இருப்பது இயல்பே என்றாலும் மிகுந்த மாறுபாடுகள் வாசிப்பவர்க்கு ஆச்சர்யம் அளிப்பவை.

           சித்தார்த்தர் பிறந்தவுடன் பிணி, முதுமை, இறப்பு ஆகியவற்றை வளரும் குழந்தையிடம் இருந்து அவரது தந்தை மறைத்து வளர்த்தார் என்பதாகட்டும், அவர் பரிவ்ராஜ்யம் மேற்கொண்ட சூழலாகட்டும் , மனைவி யசோதரை, சித்தார்த்தர்  உண்மை தேடி காடு செல்வதை விரும்பி ஏற்றாரா அல்லது மனைவிக்கு தெரியாமல் இரவு நேரத்தில் மனைவி பிள்ளையை விட்டு அவர்  விலகிச் சென்றாரா  என்பது போன்ற விஷயங்களில் முற்றிலும் மாறுபட்ட 
கருத்துக்களை அம்பேத்கர் தனது தம்மம் பற்றிய நூலில் சொல்லி செல்வது 
ஆச்சர்யத்தை அளிக்கிறது. விலாஸ் சரங் நூலில் இந்த விஷயங்கள் அனைத்தும் பொதுப் புரிதலை ஒட்டி இருப்பதை காண முடிகிறது. அம்பேத்கர்   
அவர்கள் முற்றிலும் மாறான தகவலை தருவதோடு இந்த பொதுப் புரிதல்கள் அனைத்தும் சரியானது அல்ல என நிராகரிக்கிறார். 

    1. பிணி மூப்பு சாக்காடு ஆகியன குறித்து சித்தார்த்தர் இள வயதில் இருந்தே 
புரிதலோடு இருந்தார். எந்த விஷயமும் அவரிடம் இருந்து தந்தையாலோ பிறராலோ மறைக்கப் படவில்லை.  (அம்பேத்கர் )
   
    2. சித்தார்த்தர் அவரது சாக்கிய தேசத்தின் சங்க (Sanga) உறுப்பினராக பக்கத்து 
கோலிய நாட்டோடு இருந்த தண்ணீர் தாவாவை தீர்ப்பதில் சங்கத்தோடு 
மாற்று கருத்து காரணமாக நாடு கடத்தப் பட தானே ஒப்புக் கொண்டு தாய் தந்தை மனைவி மகன் ஆகியோர் நலமாக நாட்டில் வாழ்வதற்காக காடு செல்கிறார். தாய் தந்தை வருத்தப் பட்டாலும் மனைவி முழுப் புரிதலோடு அவரை வழி அனுப்பி வைக்கிறார்.  (அம்பேத்கர் )

   3. சித்தார்த்தர் ஞானம் பெற்று நாடு திரும்பிய உடன் சற்று காலத்திற்கு பிறகு 
மனைவி தாய் மகன் ஆகியோரும் காவியுடை உடுத்தி புத்த சங்கத்தில் இணைகிறார்கள். (அம்பேத்கர்) 

   4. தம்மம் தந்தவன் நூலில் மேற்கண்ட விஷயங்களில் பொது புரிதலில் உள்ள 
மகன், சாமியார் ஆகும் நிலைக்கு பயந்த தந்தை அவனிடம் இருந்து வாழ்வின் துன்பங்கள் அனைத்தையும் மறைப்பதும் அதை மீறி சித்தார்த்தன் அவற்றை அறிவதும் சொல்லப் பட்டு உள்ளது. 

  5. தம்மம் தந்தவனில் சித்தார்தனுக்கும் அவரது மனைவிக்கும் நடக்கும் 
விஷயங்களை புனைவு சுதந்திரம் என ஒதுக்கி விடலாம் என்றாலும் 
சித்தார்த்தன் காட்டில் இருந்து திரும்பி பல வருடங்கள் சென்று வந்த உடன் தந்தைக்கு கொடுத்த வாக்கிற்கு மாறாக மகன் ராகுலையும் அவர் கூடவே 
அழைத்து சென்று விடுவதாக வருகிறது. இளமையில் தந்தையிடம் திருமணம் செய்து கொண்டு நாட்டிற்கு வாரிசு ஒன்றை தந்து விட்டு செல்லும் சித்தார்த்தன்  
மகனையும் கூடவே அழைத்து செல்வதாகவும் அதுவும் விருப்பத்திற்கு 
மாறாக அதை செய்வதாகவும் எழுதப் பட்டு உள்ளது. இவை புத்தரின் 
இயல்பிற்கு மாறாக உள்ளதாக எனக்கு பட்டது. 

6 விலாஸ் சாரங்கின் நூலில் புத்தரின் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டம் விரிவாக பேசப் படுகிறது. பிறகு அவரது வாழ்வின் துன்பங்கள் ஏற்ற இறக்கங்களும் சமமாக பேசுகிறது புத்தகம். அம்பேத்கர் தம்மத்தில் புத்தரின் போதனைகளை அலசுகிறார். அதே நேரத்தில் அவரது வாழ்க்கையை சொல்லும் பொழுது சுகர் கோட் கொடுத்து நல்லவற்றை மட்டும் காட்டும் பாணியில் எழுதி உள்ளார்.

7 விலாஸ் சாராங்கின் நூலில் புத்த சங்கத்தில் சேர்ந்த மன்னர் பெருமக்கள் மற்றவர்கள் எப்படி துன்பத்தில் உழல நேரிட்டது என்பது விவரிக்கப் படுகிறது.
அம்பேத்கர் புத்தருடைய போதனைகளை தனக்கென ஒரு பாணியில் postive side மட்டும் கூறுகிறார். 

    

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்