அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து
அம்பேத்கரும் தம்மமும் - நூலில் இருந்து சமீபத்தில் படித்த சிறப்பான ஒரு நூல் அம்பேதகரின் "பௌத்தரும் அவரது தம்மமும்".( அம்பேத்கர் நூல் தொகுப்பு 22. .) ஒரு புதிய நடையில் எழுத பட்டு இருந்தாலும் அது ரசிக்கத் தக்கதாக இருந்தது. பௌத்தத்தை பற்றிய ஒரு மேம்போக்கான புரிதலோடு தொடங்குபவர்களுக்கு நூல் ஏராளமான விவரங்களை தருகிறது. மேலும் புத்தரின் வாழ்வு பற்றியும் தத்துவம் குறித்தும் முழுமையான ஒரு விவரணையை தருகிறது. தத்துவ நெடி குறைவாகவும் எளிய வாசிப்புக்கு உகந்ததாகவும் நூல் உள்ளது. பொது புரிதல்களும் புதிய விஷயங்களும் - பரிவ்ராஜம் ஏற்கும் சூழல் புத்தரது இளமை காலம் என்றால் உடனே நினைவுக்கு வருவது அவர் பிணி மூப்பு சாக்காட்டை கடந்து பரிநிர்வாணம் எப்படி அடைவது என அறிய இளம் மனைவியையும் பச்சிளம் பாலகனாக இருந்த அவர்களது குழந்தையையும் விட்டு விட்டு இரவோடு இரவாக காட்டுக்கு சென்று விட்டார் என்பதே. உண்மையில் என்ன தான் நடந்...